சிறுவர்களைப் பாதித்த இருமல் மருந்து இங்கு இல்லை

சிறுவர்களைப் பாதித்த இருமல் மருந்து இங்கு இல்லை

1 mins read
50834631-20ec-46de-8166-35d921ae2747
இத்தகைய மருந்துகள் எதுவும் சிங்கப்பூரில் பதியப்படவும் இல்லை, விற்கப்படவும் இல்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம் -

இருமல் மருந்து, திரவ அடிப்படையிலான சில மருந்துகள் காரணமாக வெளிநாடுகளில் சிறாருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிலர் மரணமடைந்தும் இருக்கிறார்கள்.

ஆனால், அத்தகைய மருந்துகள் எதுவும் சிங்கப்பூரில் பதியப்படவும் இல்லை, விற்கப்படவும் இல்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த பாதிப்புகளுக்கு 'எத்திலீன் கிளைக்கால்' என்ற நச்சு வேதிப்பொருளே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் மருந்தை பிடி கோனிமெக்ஸ், பிடி யாரிந்தோ ஃபர்மாதாமா, யுனிவர்சல் ஃபார்ம சூட்டிக்கல் இன்டஸ்ட்ரீஸ், மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

அத்தகைய மருந்துகள் சிங்கப்பூரில் இதுவரையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாதிப்புகள் பற்றியும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதுவரை சிங்கப்பூரில் இருமல் திரவ மருந்து அல்லது திரவ அடிப்படையிலான மருந்துகள் விற்பனையையும் விநியோகத்தையும் ஆணையம் நிறுத்தவில்லை.

இருந்தாலும் ஏதேனும் பிரச்சினை தெரியவந்தால் உடனடியாக ஆணையம் பொதுமக்களுக்கு அது பற்றி எச்சரிக்கும்.

சிங்கப்பூரில் விற்கப்படும் இருமல் திரவ மருந்தும் இதர திரவ அடிப்படையிலான மருந்துகளும் அனைத்துலக தரத்துடன் கூடியவையாக இருக்க வேண்டும் என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.