2.6 மி. கேரோசல் பயனாளிகளின் தகவல்கள் திருட்டு, விற்பனை

2.6 மி. கேரோசல் பயனாளிகளின் தகவல்கள் திருட்டு, விற்பனை

2 mins read
14ebe8f4-38ca-4899-8a78-63d85fbff68a
-

கடன் அட்டை, பணப் பரிவர்த்தனை தகவல்கள் கசியவில்லை என கேரோசல் உறுதி

பிர­பல கேரோ­சல் இணையச் சந்தைத் தளத்­தில் இருந்து திருடப்­பட்­ட­தாக நம்­பப்­படும் பய­னீட்­டாளர்­க­ளின் தகவல்­கள் ரக­சிய இணை­யத்தளத்திலும் கணினி ஊடு­ரு­வல் கருத்­த­ரங்குத் தளங்­களி­லும் விற்­கப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்துள்ளது.

திரு­டப்­பட்­ட­தாக நம்­பப்­படும் கணி­னித் தரவுத்தளத்தில் 2.6 மில்­லி­யன் பய­னீட்­டா­ளர்­க­ளின் தக­வல்­கள் இருக்­கின்­றன. அவை $1,000 விலைக்கு விற்­கப்­ப­டு­கின்றன. இந்­தத் தக­வல் திருட்டு கார­ண­மாக 1.95 பய­னீட்­டா­ளர்­கள் பாதிக்­கப்­படு­வ­தாக கேரோ­சல் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அது பற்றி இந்த இணை­யச் சந்தை நிறு­வ­னம் தக­வல் தெரி­வித்­தது.

கணினி முறை­யில் எதிர்­பா­ரா­மல் ஒரு பிரச்­சினை ஏற்­பட்­ட­தா­க­வும் மூன்­றாம் தரப்பு ஒன்று அங்கீகா­ரம் இல்­லா­மல் தக­வல் வளத்தை எட்டி தக­வல்­க­ளைத் திருடி இருப்­ப­தா­க­வும் கேரோ­சல் குறிப்­பிட்­டது.

அந்­தப் பிரச்­சினை சரிப்­ப­டுத்­தப்­பட்டுவிட்­ட­தா­க­வும் அதன் பேச்­சா­ளர் கூறி­னார்.

கடன் அட்டை, பணப் பட்டுவாடா தொடர்­பான தக­வல்­கள் எது­வும் கசி­ய­வில்லை என்று கேரோ­சல் பய­னீட்­டா­ளர்­க­ளிடம் உறு­தி­பட கூறி­யது. திரு­டப்­பட்ட 2 ஜிபி அளவிலான தக­வல்­களை அக்­டோ­பர் 12ஆம் தேதி ஊடு­ருவல் பேர்­வ­ழி­கள் இணை­யத்­தில் பதி­வேற்­றினர்.

அதற்கு இரண்டு நாள் முன்­ன­தாக இந்­தத் தக­வல் கசிவு பற்றி கேரோ­சல் தெரி­வித்தது.

பய­னீட்­டா­ளர்­க­ளின் பெயர், முதல், கடைசிப் பெயர்­கள், மின் னஞ்சல் முக­வரி, கைப்­பேசி எண், நாடு, கணக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட தேதி, எத்­தனை பேர் பின்­பற்­று­கிறார்­கள் என்ற விவ­ரம் முத­லான பல­வும் கசிந்து இருக்­கின்­றன.

இத­னி­டையே, அந்­தத் தக­வல்­களில் ஐந்து பதிப்­பு­களை மட்­டுமே தாங்­கள் விற்­கப்­போ­வ­தாக ஊடுருவல் பேர்­வ­ழி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இரு பதிப்­பு­கள் விற்­று­விட்­டதாக அவர்­கள் கூறினர்.

இவ்­வே­ளை­யில், இந்­தத் தக­வல் கசிவு பற்றி பிரத்தியேக தக­வல் பாது­காப்பு ஆணை­யம், தனக்­குத் தெரி­யும் என்று தெரி­வித்­தது. புலன்­விசா­ரணை தொடங்கி இருப்­ப­தா­க­வும் அது கூறி­யது.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு முகவை அமைப்பு, கேரோ­சல் நிறு­வனத்தை எட்டி உதவி வழங்­கு­வதா­கக் குறிப்பிட்டது.

இத­னி­டையே, பாதிக்­கப்­பட்ட பய­னீட்­டா­ளர்­களு­டன் தொடர்­பு­கொண்டு போலி­யான மின்­னஞ்­சல் குறுஞ்­செய்­தி­கள் பற்றி எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்கும்­படியும் கடவுச் சீட்டு போன்ற தக­வல்­களைக் கேட்டால் கொடுக்க வேண்­டாம் என்­றும் கேரோ­சல் அறிவுரை கூறி இருக்கிறது.