நேரடி விவாதத்திற்கு வருமாறு பிரான்சனுக்கு அமைச்சு அழைப்பு
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு மரண தண்டனையைப் பயன்படுத்துவதைக் குறைகூறி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சனின் இணையத் தளத்தில் வெளியான கருத்துகளை உள்துறை அமைச்சு மறுத்து இருக்கிறது.
அந்த அம்சம் பற்றி சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகத்துடன் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க வரும்படி அவருக்கு அமைச்சு அழைப்பு விடுத்து இருக்கிறது.
திரு பிரான்சன் அக்டோபர் 10ஆம் தேதி தன் இணையத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிவேற்றினார்.
போதைப்பொருள் கடத்தியதற்காக சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தூக்கிலிடப்பட்ட மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் தொடர்பில் திரு பிரான்சன் உண்மையில்லாத கருத்துகளை வெளியிட்டு இருப்பதாக அமைச்சு கூறியது. அவர் கூறுவது உண்மையல்ல என்பதை பலமுறை தெளிவுபடுத்தி இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
என்டியுசி தொழிலாளர் மாநாடு: கவலையும் தீர்வும்
பயிற்சியில் கலந்துகொண்டு மேம்படுவதற்கான ஆற்றல் அதிகமாக இருக்கும் ஊழியர்களை மட்டுமே முதலாளிகள் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். மற்றவர்களைப் பயிற்சிக்கு அனுப்பினால் அவர்கள் பயிற்சியை முடித்ததும் போட்டி றிறுவனங்களுக்கு வேலைக்குப் போய்விடக்கூடும் என்று முதலாளிகள் அஞ்சுகிறார்கள். சிங்கப்பூரில் பல முதலாளிகள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக 'சிங்கப்பூர் ஊழியரணி' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சூன் ஷியன் தெரிவித்தார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொழிலாளர் ஆய்வு மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
அதேவேளையில், தொழில்துறைகள் சேர்ந்து தரமிக்க வாழ்க்கைத்தொழில் பயிற்சிகளை வழங்கினால், ஊழியர்கள் வேலையைவிட்டுப் போனாலும் தேர்ச்சியுடன் கூடிய இதர பிரிவினர் இருப்பார்கள் என்பது உறுதிப்படும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் அலெக்சாண்டர் மெல்செர்ஸ் கூறினார்.
எதிர்கால ஊழியர்களை ேமம்படுத்துவது பற்றிய குழு விவாதத்தில் அவர்கள் பேசினர். சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர் சங்கத்தின் தலைவியான திருவாட்டி கே தனலட்சுமி, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உதவி தலைமைச் செயலாளர் கில்பர்ட் டான் ஆகிய இதர இரண்டு பேரும் அதில் கலந்துகொண்டனர்.
தொழிற்சங்கங்களில் சேர இளையர்களுக்கு ஊக்கமூட்டுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. என்டியுசி ஆண்டுதோறும் வெளியிட இருக்கும் 'சிங்கப்பூர் தொழிலாளர் சஞ்சிகை' என்ற புதிய கல்விச் சஞ்சிகை நேற்று வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர் இங் சீ மெங், அந்தச் சஞ்சிகை, தொழிலாளர் உறவுகளை நிர்வகிப்பது என்பது பற்றிய கண்ணோட்டங் களையும் ஊழியர் அணி உருமாற்றம் பற்றிய தகவல்களையும் கொண்டு இருக்கும் என்றார்.

