சிங்ஹெல்த் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 500 ஊழியர்கள், தீவு முழுவதும் சைக்கிளோட்டியும் மலையேற்றத்தில் ஈடுபட்டும் கிட்டத்தட்ட 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து இந்த ஆண்டின் அதிபர் சவால் நிதிக்கு மொத்தம் $1,128,228 நிதி திரட்டினர்.
உறுதிமொழி அட்டை நன் கொடை இயக்கம், மெய்நிகர் போட்டி, சந்தைகள், கார்களைச் சுத்தப்படுத்தும் இயக்கம் போன்ற இதர நட வடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஐவி இங், அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இந்தத் தொகைக்கான காசோலையை ஒப்படைத்தார்.

