சிறார் பாதிப்பு இருமல் மருந்து இங்கு இல்லை

இரு­மல் மருந்து, திரவ அடிப்­ப­டை­யி­லான மருந்­து­கள் கார­ண­மாக வெளி­நா­டு­களில் சிறா­ருக்கு சிறு நீரகப் பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கிறது. சிலர் மர­ண­ம­டைந்­தும் இருக்­கிறார்கள்.

ஆனால், அத்­த­கைய மருந்­து­கள் எது­வும் சிங்­கப்­பூ­ரில் பதி­யப்­ப­ட­வும் இல்லை, விற்­கப்­ப­ட­வும் இல்லை என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது.

அந்­த பாதிப்­பு­க­ளுக்கு 'எத்­தி­லீன் கிளை­க்கால்' என்ற நச்­சு வேதிப்­பொ­ரு­ளே கார­ணம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் கூறப்­படும் மருந்தை பிடி கோனி­மெக்ஸ், பிடி யாரிந்தோ ஃபர்­மா­தாமா, யுனி­வர்­சல் ஃபார்ம சூட்­டி­க்கல் இன்­டஸ்ட்­ரீஸ், மெய்டன் ஃபார்மசூட்­டி­க்கல்ஸ் ஆகிய நிறு­வனங்­கள் தயா­ரிக்­கின்­றன.

அத்­த­கைய மருந்­து­கள் சிங்கப்பூரில் இது­வ­ரை­யில் எது­வும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

பாதிப்­பு­கள் பற்­றி­யும் இது­வரை எந்தத் தக­வ­லும் இல்லை. இது­வரை சிங்­கப்­பூ­ரில் இரு­மல் திரவ மருந்து அல்­லது திரவ அடிப்­ப­டை­யி­லான மருந்­து­கள் விற்­ப­னை­யை­யும் விநி­யோ­கத்­தை­யும் இந்த ஆணை­யம் நிறுத்­த­வில்லை.

இருந்­தா­லும் ஏதே­னும் பிரச்­சினை தெரி­ய­வந்­தால் உட­ன­டி­யாக ஆணை­யம் பொது­மக்­க­ளுக்கு அது பற்றி எச்­ச­ரிக்கும்.

சிங்­கப்­பூ­ரில் விற்­கப்­படும் இரு­மல் திரவ மருந்­தும் இதர திரவ அடிப்­ப­டை­யி­லான மருந்­து­களும் அனைத்­து­லக தரத்­து­டன் கூடி­ய­வை­யாக இருக்க வேண்­டும் என்­பதை ஆணை­யம் சுட்­டிக்­காட்­டி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!