மறுபுழக்கம் என்பது இனிமேல் பயன்படுத்தப்பட்ட பொருள்களை திரட்டும் பாமர மனிதர்களின் முயற்சிகளை மட்டும் சார்ந்திருப்பதாக இருக்காது.
அது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையாக ஆகிவிட்டது. இப்போதைய பருவநிலை நெருக்கடியை மனதிற்கொண்டு பார்க்கும்போது இது இன்றியமையாததாக உள்ளது.
தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் இதர மூவரும் அதில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் இக்கருத்தை வலியுறுத்தினர்.
அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்' அமைப்பும் ஷின் மின் சீன மொழி நாளிதழும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

