ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்று தொடக்கம்

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்று தொடக்கம்

1 mins read
d07847a9-c0ac-4c07-ab36-078d261ba67f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரில் ஐந்து வய­துக்­குக் குறை­வான குழந்­தை­க­ளுக்­கு கொவிட்-19 தொற்றுக்கு எதி­ரான தடுப்­பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இன்று பல தடுப்பூசி நிலையங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அழைத்துவந்தனர். ஆறு மாதத்திற்கும் நான்கு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு ஐந்து தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

'மொடர்னா' தடுப்பூசி ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் போடப்படுகிறது. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையே எட்டு வார இடைவெளி கொடுக்கப்படும்.