இருவகைத் திறன் தடுப்பூசியை 12 வயதுக்கும் அதிகமானோருக்கு செலுத்த ஒப்புதல்

இருவகைத் திறன் தடுப்பூசியை 12 வயதுக்கும் அதிகமானோருக்கு செலுத்த ஒப்புதல்

1 mins read
5fca3b37-834a-472a-914f-0df107d671d7
படம்: ராய்ட்டர்ஸ் -

சுகாதார அறிவியல் ஆணையம், 12ம் அதற்கும் மேலான வயது நிரம்பியவர்களுக்கு 'ஃபைசர்-பயோன்டெக்' இருவகைத் திறன்கொண்ட கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்த இடைக்கால ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொவிட்-19 கிருமி, அதன் ஓமிக்ரான் BA.4, BA.5 திரிபுகள் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை இம்மருந்து வழங்குகிறது. இடைக்கால ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு ஃபைசர், பயோன்டெக் நிறுவனங்கள் அவற்றின் ஆய்வுப் பரிசோதனை குறித்த தரவுகளை ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தன. புதிய தடுப்பு மருந்தால் பக்க விளைவுகளைக் காட்டிலும் நன்மைகளே அதிகம் என்பதை உறுதிசெய்வதற்காக இந்தத் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆணையம் குறிப்பிட்டது.

இதனை செலுத்திக்கொள்வோர் ஓரிரு நாள்களுக்கு ஊசி செலுத்திய இடத்தில் வலி, சோர்வு, தலைவலி, தசை வலி போன்ற பக்கவிளைவுகளை எதிர்கொள்ளக்கூடும்.