2050ல் கரியமில வாயு வெளியேற்றச் சமநிலை

2050ல் கரியமில வாயு வெளியேற்றச் சமநிலை

2 mins read
a0247ea2-3ece-4912-8b59-a4a664ad1134
-

சிங்­கப்­பூர் 2050ஆம் ஆண்­டுக்­குள் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தில் சம­நிலை காணும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் (படம்) கூறியிருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரம் 2022ல் உரை­யாற்­று­கை­யில் அவர் அவ்­வாறு கூறி­னார்.

கரி­ய­மில வாயு வெளி­யே­றும் அள­வும் காற்று மண்­ட­லத்­தில் இருந்து அது வெளி­யேற்­றப்­படும் அளவும் சம­மாக இருந்­தால் அது கரி­ய­மில வாயு வெளி­யேற்­றச் சம­நிலை எனப்­படும்.

முன்­ன­தாக அர­சாங்­கம் 2050ஆம் ஆண்­டுக்­குள் இத்­த­கைய சம­நிலையை எட்ட இலக்கு வகுத்­தி­ருந்­தது. இப்­போது அதனை நோக்­கிய பாதை­யில் சரி­யா­கச் சென்­று­கொண்­டி­ருப்­ப­தாக அது உறு­திப்­ப­டுத்­தி­உள்­ளது.

சிங்­கப்­பூர் வெளி­யேற்­றும் கரி­ய­மில வாயு­வின் அளவு 2030ஆம் ஆண்­டுக்கு முன்­னர் உச்­சத்தை எட்­டும் என்­றும் அவ்­வாண்­டில் அந்த அளவு ஏறக்­கு­றைய 60 மில்­லி­யன் டன்னாக இருக்­கும் என்­றும் திரு வோங் கூறி­னார்.

முன்­னர் ஆண்­டுக்கு 65 டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் என்ற அள­விற்கு சிங்­கப்­பூர் கடப்­பாடு தெரி­வித்­தி­ருந்­ததை அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

இப்­போது 5 மில்­லி­யன் டன் குறைக்­கப்­பட்­டி­ருப்­பது சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்­தின் மூலம் வெளி­யே­றும் கரி­ய­மில வாயு­வின் அளவை மூன்­றில் இரண்டு பங்­கா­கக் குறைத்­தி­ருப்­ப­தற்­குச் சமம் என்­றார் துணைப் பிர­த­மர்.

அர­சாங்­கத் துறை­கள் 2045ஆம் ஆண்டு வாக்­கில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றச் சம­நி­லையை எட்­டும். புதி­தா­கக் கட்­டப்­படும் ஜூரோங் லேக் வட்­டா­ரக் கட்­டு­மா­னங்­க­ளுக்­கும் இது பொருந்­தும் என்­றார் அவர்.

குறை­வான கரி­ய­மில ஹைட்­ர­ஜன் வாயு பயன்­பாடு தொடர்­பான திட்­டங்­களில் முத­லீடு செய்­வ­தை­யும் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தை­யும் சிங்­கப்­பூர் அதி­க­ரிக்க விரும்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான கடப்­பாட்­டு­டன் சிங்­கப்­பூர் செயல்­பட்டு வரு­கிறது. கரி­ய­மில வரியை 2030க்குள் படிப்­ப­டி­யாக உயர்த்­து­தல், கட்­ட­டங்­க­ளின் கூரை­க­ளி­லும் நீர்த்­தேக்­கங்­க­ளி­லும் சூரி­ய­சக்­தித் தக­டு­க­ளைப் பொருத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் மேற்­கொண்­டி­ருப்­பதைத் திரு வோங் எடுத்­து­ரைத்­தார்.

15ஆவது முறை­யாக நடை­பெறும் இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வார நிகழ்ச்­சி­யில் அர­சாங்­கப் பிர­தி­நி­தி­கள், தொழில்­து­றை­யி­னர், முத­லீட்­டா­ளர்­கள், கல்­வி­மான்­கள் எனப் பல தரப்­பி­ன­ரும் கலந்­து­கொண்­ட­னர்.