இந்தோனீசிய இயற்கை எரிவாயு விநியோகம் தொடரும்

இந்­தோ­னீ­சி­யா­வின் தெற்கு சுமத்­ரா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு இயற்கை எரி­வாயு விநி­யோ­கம் செய்­வ­தற்­கான உடன்­ப­டிக்கை அடுத்த ஆண்டு காலா­வ­தி­யான பிற­கும் இந்த விநி­யோ­கம் தொட­ரும் என்று இந்­தோ­னீ­சிய எரி­சக்தி, கனி­ம­வள அமைச்­சர் அரி­ஃபின் டஸ்­ரிஃப் கூறி­யி­ருக்­கி­றார்.

இதன் தொடர்­பில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் புதிய விநி­யோக ஒப்­பந்­தம் ஐந்து ஆண்­டு­களுக்கு நடப்­பில் இருக்­கும் என்­றும் அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

இது­பற்­றிய அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு இந்த வாரத்­திற்­குள் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் அதன் மின்­சா­ரத் தேவை­களில் 95 விழுக்­காட்டை ஈடு­செய்ய இவ்­வாறு இறக்­கு­ம­தி­யா­கும் இயற்கை எரி­வா­யு­வைச் சார்ந்­தி­ருக்­கிறது. உல­க­ள­வில் இயற்கை எரி­வாயு விநி­யோ­கத்­தில் மாற்­றம் ஏற்­பட்­டால் அத­னால் சிங்­கப்­பூர் பெரி­தும் பாதிக்­கப்­படும் வாய்ப்பு அதி­கம்.

அடுத்த ஆண்டு காலா­வ­தி­ஆகும் உடன்­ப­டிக்­கை­யில் சிங்­கப்­பூ­ரின் 'ஜிஎஸ்­பி­எல்' நிறு­வனத்திற்குத் தொடர்பு இருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

பவர்­கேஸ் நிறு­வ­னத்­தின் கிளை நிறு­வ­ன­மான இது, 2000ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு இயற்கை எரி­வா­யுவை இறக்­கு­மதி செய்­வ­தற்­கா­கத் தொடங்­கப்­பட்­டது.

இந்­நி­று­வ­னம் 2003ஆம் ஆண்டு முதல் 2023 வரை தெற்கு சுமத்­ரா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு இயற்கை எரி­வா­யுவை இறக்­கு­மதி செய்ய 12.8 பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான ஒப்­பந்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ளது.

தெற்கு சுமத்­ரா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் இயற்கை எரி­வாயு, இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பப்­படும் மொத்த எரி­வாயு விற்­ப­னை­யில் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காடு ஆகும்.

செம்ப்­கார்ப் நிறுவனமும் இந்­தோ­னீ­சி­யா­விலிருந்து இயற்கை எரி­வா­யுவை வாங்­கு­கிறது. அது மேற்கு நட்­டு­னா­வில் இருந்து எரி­வா­யு­வைப் பெறு­கிறது. சிங்­கப்­பூர் மலே­சி­யா­வில் இருந்­தும் இயற்கை எரி­வா­யுவை இறக்­கு­மதி செய்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!