மனநலக் குறைபாடு: தவறான புரிதலைக் களைய ஏற்பாடு

மனநலக் குறைபாடு: தவறான புரிதலைக் களைய ஏற்பாடு

1 mins read
fb692832-c37b-4f60-a81f-aa644090ec7d
ரயிலின் உட்புறத்தின் தரையிலும் பக்கவாட்டிலும் மனநலக் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள், உரையாடல்கள் இடம்பெறுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மன­ந­லக் குறை­பாடு பற்றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகையில் வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் செல்­லும் எம்­ஆர்டி ரயில்­க­ளின் உட்­பு­றம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

'பியோன் தி லேபல்' (பிடி­எல்) எனும் திட்­டத்­தின்­கீழ் இந்த ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த ரயில்­க­ளின் உட்­பு­றத்­தில் உள்ள தரை­யி­லும் பக்­க­வாட்­டி­லும் திட்­டத்­தின் சின்­ன­மான 'பிரேவ்' ஆங்­காங்கே இடம்­பெ­று­கிறது.

மன­ந­லக் குறை­பாடு கொண்­டோ­ரின் அனு­ப­வங்­கள், குண­ம­டை­யும் பட­லம், பள்­ளி­யில், வீட்­டில், வேலை­யி­டத்­தில் நண்­பர்­களும் குடும்­பத்­தா­ரும் அவர்களுக்கு வழங்­கும் ஆத­ரவு ஆகியவை பற்றிய குறிப்பு­கள் இதில் இடம்­பெ­று­

கின்­றன.

மன­ந­லக் குறை­பாடு கொண்­ட­வர்­க­ளு­டன் எவ்­வாறு பேசு­வது, அவர்­க­ளுக்கு எவ்­வாறு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது குறித்து பொது­மக்­க­ளுக்­குக் கற்­பிக்­கும் நோக்­கில் ரயி­லின் உட்­ப­றத்­தில் உரை­ந­டை­யு­ட­னான படங்­கள் உள்­ளன.

பிடி­எல் இயக்­கம், தேசிய சமூக சேவை மன்­றம், டச் சமூக சேவை­கள் அமைப்பு ஆகி­ய­வற்­றால் 'கோ பியோன்' எனும் கருப்­பொ­ரு­ளு­ட­னான பிடி­எல் ரயில்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மன­ந­லக் குறை­பாடு தொடர்­

பா­கச் சமு­தா­யத்­தில் நில­வும் தவ­றான புரி­த­லைக் களை­ய­வும் பாதிக்கப்­பட்­டோ­ருக்­குப் பொது­

மக்­க­ளி­ட­மி­ருந்து கூடு­தல் ஆத­ர­வைத் திரட்­ட­வும் இந்­தத் திட்­டம் இலக்கு கொண்­டுள்­ளது. மன­ந­லக் குறை­பாடு குறித்த தவ­றான புரி­தல் சமு­தா­யத்­தில் தொடர்ந்து பர­வ­லாக உள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. சுய கட்­டுப்­பாடு, மன உறுதி இல்­லா­த­தால் மன­ந­லக் குறை­பாடு ஏற்­ப­டு­வ­தாக நான்­கில் ஒரு­வ­ருக்­குத் தவ­றான புரி­தல் இருப்­ப­தாக தேசிய சமூக சேவை மன்­றம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.