தேசிய நினைவுச் சின்னங்கள் பற்றிய புதிர்ப்போட்டி

மோன­லிசா

குடிமை வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள ஒன்­பது தேசிய நினை­வுச் சின்­னங்­க­ளைப் பற்­றிய பல சுவா­ர­சிய தக­வல்­களை அறிந்து கொள்ள தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு புதிர்ப்­போட்டி ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றுத் தக­வல்­களை பற்­றிய விழிப்­பு­ணர்வை பொது­மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இப்­பு­திர்ப்­போட்டி நவம்­பர் 5ஆம் தேதி முதல் டிசம்­பர் 17ஆம் தேதி வரை­ ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மை­யும் நடை­பெ­றும்.

தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் வர­லாற்று நினை­வுச் சின்­னங்­களைப் பாது­காக்­கும் பிரிவு வழங்­கும் இப்­போட்டி ஆசிய நாகரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் தொடங்­க­வுள்­ளது.

போட்­டி­யில் பங்­கேற்­கும் ஒவ்­வொரு போட்­டி­யா­ள­ருக்­கும் புதிர் புத்­த­கம், வரை­ப­டம், குறிப்பு அட்டை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய ஒரு பை வழங்­கப்­படும். மேலும் ஒவ்­வொரு பங்­கேற்­பா­ள­ருக்­கும் நினை­வுச் சின்­னங்­கள் பொருந்­திய நினை­வுப் பரி­சும் வழங்­கப்­படும்.

ஒரு மணி நேரம் நடை­பெ­றும் இப்­போட்டி காலை 10 மணி,

11 மணி, நண்­ப­கல் 12 மணி என மூன்று நேரங்­களில் நடை­பெ­றும். இப்­போட்­டி­யில் 13 வய­திற்கு மேற்­பட்­டோர் தனியாக­வும் 12 வய­திற்கு கீழுள்­ளோர் பெற்­றோ­ரு­டன் அல்லது காப்­பா­ள­ரு­டன் கலந்து கொள்­ள­லாம்.

இது குறித்து வர­லாற்று நினை­வுச் சின்­னங்­களைப் பாது­காக்­கும் பிரி­வின் கொள்கை மற்­றும்

கல்­வித்­து­றை மேலா­ளர் திரு­வாட்டி ஸ்டெல்லா வூ, "சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றை­யும் மர­பு­டை­மை­யை­யும் பொது மக்­க­ளி­டம் சுவா­ர­சி­ய­மான முறை­யில் கொண்டு செல்ல இப்­போட்டி நடத்­தப்­ப­டு­கிறது.

"குறிப்­பாக, அதிக சிங்­கப்­பூர் இளை­யர்­களை கவ­ரும் நோக்­கில் இப்­போட்டி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார்.

இப்­போட்­டிக்­கான நுழை­வுச் சீட்­டு­களை https://nhbpsm.peatix.com/ இணை­ய­த்தள முக­வ­ரி­யில் முன்­ப­திவு செய்­ய­லாம்.

எதிர்­வ­ரும் 31ஆம் தேதிக்­குள் நுழை­வுச் சீட்டை முன்­ப­திவு செய்­வோ­ருக்கு 20% விலைக்­க­ழிவு வழங்­கப்­படும்.

நுழை­வுச்­சீட்­டின் விலை, ஏழு முதல் 12 வய­து­டை­யோ­ருக்கு $15, 13 வயது மற்­றும் அதற்கு மேலுள்­ளோ­ருக்கு $20 ஆகும்.

ஆறு வயது மற்­றும் அதற்கு கீழுள்ள பிள்­ளை­க­ளுக்கு இல­வச அனு­மதி வழங்­கப்­படும்.

மேலும் இப்­போட்­டி­யின் ஓர் அங்­க­மாக இன்ஸ்டா இணை­யப் பக்­கத்­தில் நடத்­தப்­படும் தேடு­தல் போட்­டி­யில் வெற்­றி­பெ­று­வோ­ருக்கு தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் நினை­வுச் சின்­னங்­க­ளின் வழி­காட்­டுச் சுற்­று­லா­வுக்­கான

நுழை­வுச்­சீட்­டு­கள் பரி­சாக வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!