ஹோட்டல் ஊழியர்கள் மேம்பட உதவும் திட்டம்

ஹோட்டல் ஊழியர்கள் மேம்பட உதவும் திட்டம்

2 mins read
9a8eb74d-dc06-4960-9996-b075755b7153
-

ஹோட்­டல் தொழில்­துறை ஊழி­யர்­க­ளின் திறன்­களை வளர்க்கும் திட்­டம் தொடங்கி வைக்கப்­பட்­டுள்­ளது. அதன்­படி ஹோட்­டல் தொழில்­துறை உரு­மாற்­றத் திட்­டத்­தின் தொடக்க விழா நேற்று நடை­பெற்­றது. திட்­டத்­தின்­கீழ் நான்கு உத்­தி ­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஹோட்­டல் தொழில்­துறை ஊழி­யர்­க­ளின் தற்­போ­தைய பணி­கள் அதிக மதிப்புள்ள பத­வி­க­ளாக உரு­மாற்­றப்­ப­டு­வது அவற்­றில் அடங்­கும். புதுப்­பிக்­கப்­பட்ட ஹோட்­டல் அணு­கு­மு­றை­யால் விருந்­தி­னர்­

க­ளின் தேவை­க­ளைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது, முக்­கிய கொள்­கை­யாக நீடித்த நிலைத்­

தன்­மை­யைக் கொண்­டி­ருப்­பது, சோதித்து உறுதி செய்­யப்­பட்ட தொழில்­நுட்­பங்­க­ளின் பயன்­பா­டு­களை அதி­க­ரிப்­பது ஆகி­யவை மற்ற மூன்று உத்­தி­க­ளா­கும்.

விருந்­தோம்­பல் துறை­யில் சேரும் உள்­ளூர் மாண­வர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க

பள்­ளி­க­ளு­டன் சிங்­கப்­பூர் பய­ணத்­

து­றைக் கழ­கம் தனது தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­தும்.

அதே வேளை­யில், ஹோட்­டல்­களில் பணி­பு­ரி­யும் உள்­ளூர் ஊழி­யர்­கள் பதவி உயர்வு பெற அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் நடப்­பில் உள்ள ஆத­ர­வுத் திட்­டங்­களை ஹோட்­டல்­கள் பயன்­ப­டுத்­த­லாம்.

ஹோட்­டல் தொழில்­துறை உரு­மாற்­றுத் திட்­டம் 2025ஐ உணவு, பானங்­கள், கூட்­டணி ஊழி­யர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் ஹோட்­டல் சங்­கம், ஹோட்­டல் தொழில்­துறை, அர­சாங்க அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் மேம்­ப­டுத்­தி­யது. இதற்கு எதிர்­கா­லப் பொரு­ளி­யல் மன்­றம் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது.

முதல் ஹோட்­டல் தொழில்­துறை உரு­மாற்றத் திட்­டம் கடந்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து ஹோட்­டல் தொழில்­துறை மேம்­பட்­டுள்­ள­தாக வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் தெரி­வித்­தார்.

"வர­லாற்று ரீதி­யா­கப் பார்க்­கும்­போது சிங்­கப்­பூ­ரின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை வரு­வா­யில் 20 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான வரு­மா­னம் உள்­ளூர் ஹோட்­டல் தொழில்­து­றை­யின் பங்­க­ளிப்­பா­கும். கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தலை­தூக்­கி­ய­தற்கு முன்­பாக, அதா­வது 2019ஆம் ஆண்­டில் உள்­ளூர் ஹோட்­டல் தொழில்­து­றை­யில் 400 நிறு­வ­னங்­கள் இருந்­தன.

"உள்­ளூர் ஹோட்­டல் தொழில்­து­றை­யில் 34,000க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் பணி­பு­ரிந்­த­னர். 2015ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சரா­சரி உற்­பத்­தித்­தி­றன் அடிப்­ப­டை­யில் மற்ற ஆசிய நாடு­

க­ளின் ஹோட்­டல் தொழில்­து­றை­

க­ளை­விட சிங்­கப்­பூ­ரின் ஹோட்­டல் தொழில்­துறை மிகச் சிறப்­பா­கச் செயல்­பட்­டது," என்று சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் உள்ள ஃபுட் அண்ட் ஹோட்­டல் ஏஷியா-ஹோட்­டல், உண­வ­கம், கெஃபேயில் நடை­பெற்ற அனைத்­து­லக வர்த்­தக நிகழ்ச்­சி­யின் திறப்பு விழா­வில் திரு டான் தெரி­வித்­தார்.

2029ஆம் ஆண்­டில் முன் இல்­லாத அள­வில் சிங்­கப்­பூர் ஹோட்­டல்­களில் சரா­ச­ரி­யாக 87 விழுக்­காட்டு அறைகள் நிரம்­பின. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யின் ஹோட்­டல் நிபு­ணர்­க­ளுக்­கான வாழ்­நாள்­தொ­ழில் மாற்­றுத் திட்­டத்­தின் மூலம் ஏறத்­தாழ 60 ஹோட்­டல்­

க­ளைச் சேர்ந்த 1,400க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் பல­ன­டைந்­த­னர். இவ்­வாண்டு இறு­திக்­குள் சிங்­கப்­பூ­ருக்கு நான்கு மில்­லி­ய­னி­லி­ருந்து ஆறு மில்­லி­யன் அனைத்­து­ல­கப் பய­ணி­கள் வரு­வர் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டது.

இதில் சிங்­கப்­பூ­ருக்கு வரும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட ஆறு மில்­லி­ய­னா­கப் பதி­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

சுற்­றுப்­ப­ய­ணி­கள் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு இவ்­வாண்டு இறு­திக்­குள் $10 பில்­லி­ய­னுக்­கும் $12 பில்­லி­ய­னுக்கு இடைப்­பட்ட வரு­வாய் கிடைக்­கும் என்று நம்­பப்

­ப­டு­கிறது.