பணிப்பெண்ணின் பார்வை பறிபோனது; பெண்ணுக்குப் பத்து ஆண்டுகள் சிறைவிதிப்பு

பணிப்பெண்ணின் பார்வை பறிபோனது; பெண்ணுக்குப் பத்து ஆண்டுகள் சிறைவிதிப்பு

2 mins read
bb65dd50-9081-4cc4-b72b-ee90da293ebb
-

தன் வீட்­டில் வேலை செய்த இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்ணை ஆறு மாத­கா­ல­மா­கக் கொடு­மைப்­படுத்தி, நிரந்­த­ர­மாக அவ­ரது பார்­வைத்­தி­றன் பறி­போ­கக் கார­ண­மாக இருந்த பெண்­ணுக்கு நேற்று பத்து ஆண்டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

உம்மி கல்­சும் அலி, 43 (படம்), என்ற இந்­தப் பெண்­ணுக்கு 4,500 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

வேண்­டு­மென்றே கடும் காயம் விளை­வித்­தது, மருத்­துவ கவ­னிப்பு வழங்­கா­த­தன் மூலம் பணிப்­பெண்ணை மோச­மாக நடத்­தி­யது உள்­ளிட்ட தன்­மீ­தான ஆறு குற்­றச்­சாட்­டு­களை உம்மி ஒப்­புக்­கொண்­டார்.

திரு­வாட்டி சுகி­யம் சமத் ரதிமா, 51, என்ற அப்­ப­ணிப்­பெண்­ணுக்­குப் பல­முறை போது­மான உணவு வழங்­கா­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களும் தண்­டனை விதிக்­கப்­ப­டு­முன் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

கடந்த 2019 ஆகஸ்ட்­டில் திரு­வாட்டி சுகி­யம், உம்­மி­யின் வீட்­டில் வேலைக்­குச் சேர்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அவ­ரைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக 2020ஆம் ஆண்­டுத் தொடக்­கத்­தில் தம் வீட்­டுச் சமை­ய­ல­றை­யில் கண்­கா­ணிப்­புப் படக்­கரு­வி­யைப் பொருத்­தி­னார் உம்மி.

2020ஆம் ஆண்டு ஏப்­ர­லில் திரு­வாட்டி சுகி­யத்­தின்­மீது அதிருப்தி அடைந்த உம்மி, அவ­ரது கன்­னத்­தி­லும் காது­க­ளி­லும் மாறி மாறி அறைந்­தார். அத­னால், அப்­போது ஹிஜாப் அணி­யா­தி­ருந்த திரு­வாட்டி சுகி­யன் இடக்­காது வீங்­கி­விட்­டது.

அதைக் கண்­டும் உம்மி அவ­ருக்கு எந்த முத­லு­த­வி­யும் அளிக்­க­வில்லை; மருத்­து­வ­ரி­ட­மும் அழைத்­துச் செல்­ல­வில்லை. அத­னால், திரு­வாட்டி சுகி­யத்­தின் இடக்­காது உரு­மா­றிப்­போ­ன­தாக அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

அதே சம்­ப­வத்­தில், அவ­ரது கண்­க­ளி­லும் உம்மி திரும்பத் திரும்பக் குத்­து­விட்­டார். இத­னால் அவர் தமது வலக்­கண் பார்­வையை இழந்­தார்.

பின்­னர் தனது கைப்­பே­சி­யா­லும் துணி உலர்த்­தி­யா­லும் திரு­வாட்டி சுகி­யத்­தின் தலை­யி­லும் தோளி­லும் முது­கி­லும் உம்மி அடித்­தார்.

சில நாள்­க­ளுக்­குப்­பின் தனக்கு வலக்­கண் தெரி­ய­வில்லை என்று திரு­வாட்டி சுகி­யம் கூறி­யும் உம்மி அவரை மருத்­து­வ­ரி­டம் அழைத்­துச் செல்­ல­வில்லை. மாறாக, வீட்டை விட்டு வெளியே சென்­றால் பின்னர் வீடு திரும்பவே முடியாது என்று உம்மி மிரட்டியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

திரு­வாட்டி சுகி­யத்­திற்கு வலது கண் தெரி­வ­தில்லை என்­பதை அறிந்­தி­ருந்­தும் 2020 ஏப்­ரல்-செப்­டம்­பர் மாதங்­க­ளுக்கு இடையே உம்மி திரு­வாட்டி சுகி­யத்­தின் கண்­களில் குத்­து­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

அப்­படி ஒரு சம்­ப­வத்­திற்­குப் பின் திரு­வாட்டி சுகி­யத்­தின் இடக்­கண்­பார்­வை­யும் பறி­போ­னது.

அதன்­பின் சுவ­ரைப் பிடித்­தும் தரை­யைத் தட­வி­ய­ப­டி­யும் நட­மாடிய அவர், தொடர்ந்து வீட்டு வேலை­க­ளை­யும் செய்­தார்.

பின்னர் 2020 அக்டோபரில் அவர் இந்தோனீசியாவிற்குத் திரும்பினார். செமராங் சென்ற பிறகே அவர் பட்ட துன்பங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. பின்னர் விசாரணையில் உதவுவதற்காக அவர் சிங்கப்பூர் திரும்பினார்.

2019 ஜூலை 76 கிலோ­வாக இருந்த திரு­வாட்டி சுகி­யத்­தின் உடல் எடை 2021 பிப்­ர­வ­ரி­யில் 52.8 கிலோ­வா­கக் குறைந்து போனது. சிங்­கப்­பூ­ரில் அவ­ருக்கு மருத்­துவ கவ­னிப்பு வழங்­கப்­பட்ட போதும் அவருக்கு மீண்­டும் கண் பார்வை திரும்பாது என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.