தொழிலியல் கட்டடத்தில் சட்டவிரோத உள்வாடகை; விசாரணை

தொழிலியல் கட்டடத்தில் சட்டவிரோத உள்வாடகை; விசாரணை

2 mins read
d1a31bd7-9906-4947-b5d1-83f6a02ac229
-

லெங் கீ சாலை­யில் உள்ள அமைந்­துள்ள ஒரு தொழிலியல் கட்­ட­டத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக உள்­வா­ட­கைக்கு விடப்­பட்­ட­தா என்று ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் (ஜேடிசி) விசா­ரித்து வரு­கிறது.

லெங் கீ ஆட்­டோ­பா­யிண்ட் என்ற அந்­தக் கட்­டடம் 'வெல்த் அசட்ஸ்' நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மா­னது.

எட்­டுத் தளங்­க­ளைக் கொண்ட அந்­தத் தொழி­லியல் கட்­டத்­தில் பல கார் விற்­பனை நிலை­யங்­களும் பட்­ட­றை­களும் செயல்­பட்டு வரு­கின்­றன. 'யூரோஸ்­போர்ட்ஸ் குளோ­பல்' வாகன நிறு­வனம் அவற்­றுள் முக்­கி­ய­மா­னது.

அங்­குள்ள சிறு குத்­த­கை­தாரர்­களில் சிலரை அங்­கி­ருந்து வெளி­யே­றும்­படி 'வெல்த் அசட்ஸ்' நிறு­வனம் கேட்­டுக்­கொண்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரி­வித்­தது.

"அனு­ம­திக்­கப்­பட்ட பயன்­பாட்­டிற்­குத் தொடர்­பி­ராத நிறு­வ­னங்­களுக்­குத் தங்­க­ளது மொத்­தத் தளப்­ப­ரப்­பில் 30 விழுக்­காட்டை உள்­வா­ட­கைக்­கு­விட குத்­த­கை­தாரர்­கள் ஜேடி­சி­யி­டம் அனு­மதி கோர­லாம். இவ்­வி­வ­கா­ரம் குறித்து அறிந்­துள்­ளோம். விசா­ரணை இடம்­பெற்று வரு­கிறது," என்று ஜேடிசி பேச்­சா­ளர் சொன்­ன­தாக அச்­செய்தி கூறி­யது.

இத­னி­டையே, இம்­மா­தம் 9ஆம் தேதி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த தக­வலை அடுத்து, யூரோஸ்­போர்ட்ஸ் வளா­கத்­தில் தீப்­பா­து­காப்பு விதி­கள் எது­வும் மீறப்­பட்­டுள்­ள­னவா என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை சோதனை மேற்­கொண்­டது.

இது­பற்றி குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் கூறு­கை­யில், "24 லெங் கீ சாலை­யில் அமைந்­துள்ள கட்­டட வளா­கத்­தில் குடி­மைத் தற்­காப்­புப் படை சோதனை மேற்­கொண்­டது. அப்­போது தீப்­பாது­காப்பு தொட­பான பல விதி­மு­றை­கள் மீறப்­பட்­டது கண்­டு­பிடிக்­கப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­குக் குற்­றச்­செ­யல் அறிக்­கை­கள் வழங்கி, அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு உள்­ளது," என்று விவ­ரித்­தார்.

குறிப்­பாக, கட்­ட­டத்­தின் 7வது, 8வது தளங்­களில் அக்­குற்­றச்­செயல்­கள் இடம்­பெற்­றது கண்­டு­பிடிக்­கப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.