கைத்தொலைபேசி தொடர்பான 140 மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர், மொத்தம் $360,000க்கும் அதிகமான இழப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் அவர்கள்மீது மோசடி குற்றம் சுமத்தப்பட்டது.
சந்தேக நபர்களான தியோ ஜூன் ஹாவ், 23 , மற்றும் வனேசா செவ் ஷி கிங், 25, மத்திய காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 28 வரை 'கேரோசெல்' என்ற இணையத்தள சேவையில் இருவரும் கூட்டணியாக வாடிக்கையாளர்களை ஏமற்றியிருக்கலாம் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டது.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 ஆகிய கைத்தொலைபேசிளுக்கு வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி, கைத்தொலைபேசியை கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 1 மற்றும் 17 க்கு இடையில், இந்த வழக்கு குறித்து அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. . தொடர் விசாரணையின் மூலம், வணிக விவகாரத் துறையின் அதிகாரிகள் சந்தேக நபர்களின் அடையாளத்தை கண்டுபிடித்து, வெளிநாட்டிலிருந்து அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் சாங்கி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தனர் என்று காவல் அதிகாரிகள் கூறினர். பொதுமக்கள் தங்கள் பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்தோ அல்லது நம்பகமான தளங்களிலிருந்தோ, பொருள்களை வாங்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

