பெண் மருத்துவர் போல் பாசாங்கு செய்த நபருக்கு 40 மாதங்கள் சிறை

பெண் மருத்துவர் போல் பாசாங்கு செய்த நபருக்கு 40 மாதங்கள் சிறை

1 mins read
a2c3595e-5c87-4688-9656-51999a6320f3
கைதுசெய்யப்பட்ட யி சன் வேய் பெண் மகப்பேறு  மருத்துவர் போல் நடித்து பெண்களை ஏமாற்றினார் (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

தனியார் மருத்துவமனையில் பெண் மகப்பேறு மருத்துவர் போல் நடித்து 35 பெண்களின் அந்தரங்கத்தை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப வைத்து ஏமாற்றியுள்ளார் 37 வயதான திரு உயி சன் வேய். இதன் தொடர்பில், புதன்கிழமை அன்று நாற்பது மாத சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

மலேசிய நாட்டை சேர்ந்த அவர் ஆள் மாறாட்டம் செய்த ஆறு குற்றஞ்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதேபோன்ற பதினைந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டது.

உயி கிளெனிகல்ஸ் மெடிக்கல் மருத்துவமனையிலிருந்து டாக்டர் ஜானிஸ் லீ யான் ஹே என்ற நபரை போல ஃபேஸ்புக்கில் நடித்து மலேசிய பெண்மணியின் புகைப்படத்தை பயன்படுத்தி இந்த பெண்களை ஏமாற்றினார்.

2018 மற்றும் 2021 க்கு இடையில், அவரால் பாதிக்கப்பட்ட 35 பேர், மொத்தம் 919 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உயிக்கு அனுப்பியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சந்தேகப்பட்டு அவரின் தந்திரத்தை கண்டுபிடித்து காவல் துறையிடம் புகார் செய்தார் , நவம்பர் 11, 2021 அன்று ஓய் கைது செய்யப்பட்டார்.