மது அருந்திவிட்டு சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறி, மின் சைக்கிளோட்டிமீது மோதிய குற்றத்திற்கு 32 வயதான பிஎம்டபிள்யூ ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புதன்கிழமை நள்ளிரவு 12.05 மணியளவில் விபத்து நடந்ததை அறிந்து விபத்துக்குள்ளான இருவரையும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
செம்பவாங் சாலை மற்றும் கான்பேரா சாலை சந்திப்பில் விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
'எஸ்ஜி ரோடு விஜிலன்டி' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில், மின் சைக்கிள் சாலையைக் கடக்கும்போது, வெள்ளி நிற பிஎம்டபிள்யூ செடான் வாகனம் ஒன்று சிவப்பு விளக்கைக் கடந்து செல்வதைக் காணமுடிந்தது.* சைக்கிளோட்டியைமீது மோதிய பிறகு மட்டுமே ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியது காணொளியில் பதிவுசெய்யப்பட்டது.
விசாரணை தொடர்கிறது.


