மலேசிய மாமன்னருக்கு விருந்தளித்து உபசரித்த பிரதமர் லீ

மலேசிய மாமன்னருக்கு விருந்தளித்து உபசரித்த பிரதமர் லீ

1 mins read
fd6eb32b-98ab-4a29-957d-ef8c93ba4aaa
மலேசிய மாமன்னர், அவரது மனைவி ஆகியோருடன் திரு, திருமதி லீ. படம்: ஃபேஸ்புக்/லீ சியன் லூங், தொடர்பு, தகவல் அமைச்சு -

மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷா தமது துணை­வி­யா­ரு­டன் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்டு சிங்­கப்­பூ­ருக்கு வருகை புரிந்­துள்­ளார். அரச தம்­ப­தி­யைச் சந்­தித்து அவர்­க­ளுக்கு மதிய உணவு விருந்­த­ளிப்­ப­தில் தாமும் தமது துணை­வி­யா­ரும் பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­கப் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார். பிர­த­மர் ஃபேஸ்புக்­கில் இதை நேற்றுப் பதி­விட்­டுள்­ளார்.

சந்­திப்­பின்­போது சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடை­யி­லான அணுக்­க­மான உற­வைத் தாங்­கள் மறு­உ­று­திப்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கத் திரு லீ குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக மாமன்­னர் தம்­பதி தமக்கு அளித்த விருந்­தோம்­ப­லுக்­கும் அவர்­க­ளது பெருந்­தன்­மைக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்ட பிர­த­மர் லீ, அரண்­ம­னை­யில் அர­சி­யார் தயா­ரித்த சம்­பா­லைக் குறிப்­பிட்டு நன்றி கூறி­னார்.

இரு நாடு­களும் பல்­வேறு துறை­களில் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தால் இரு­த­ரப்பு உறவுகள் மேன்­மே­லும் வலு­வ­டை­யும் என்று தாம் நம்­பு­வ­தா­கத் திரு லீ குறிப்­பிட்­டுள்­ளார். மாமன்­னர் தம்­ப­தி­யின் சிங்­கப்­பூர் பய­ணம் வெற்­றி­பெற அவர் வாழ்த்­துக் கூறி­னார்.