யுஓபி வங்கி: வீட்டில் பராமரிப்புப் பொறுப்புகள் உள்ள 200 பெண்களுக்கு கூடுதல் நீக்குப்போக்குடன் வேலை

யுஓபி வங்கி: வீட்டில் பராமரிப்புப் பொறுப்புகள் உள்ள 200 பெண்களுக்கு கூடுதல் நீக்குப்போக்குடன் வேலை

1 mins read
c2d124d7-3688-4311-914e-d06679e5b5cd
-

சிங்­கப்­பூ­ரின் மூன்­றா­வது பெரிய வங்­கி­யான யுஓபி வங்கி, வீட்­டில் பரா­ம­ரிப்பு பொறுப்பு இருப்­ப­தால் வேலை­யி­டத்­தில் கூடு­தல் நீக்­குப்­போக்கு தேவைப்­படும் 200 பெண்­க­ளுக்கு சிறப்பு வேலை­வாய்ப்பை வழங்­கு­கிறது.

அண்­மை­யில் பிள்­ளை­பெற்ற பெண்­கள், வீட்­டில் முதி­யோ­ரைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்பு உள்ள பெண்­கள், வெகு­நாள் முன்பு வேலை­யில் இருந்து வில­கி­னா­லும் தற்­போது படிப்­ப­டி­யாக மீண்­டும் முழு­நேர வேலை­யில் சேர விரும்­பும் பெண்­கள் போன்­றோ­ருக்கு இவ்­வாறு வேலை­வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கிறது.

புதிய 'கிக்+யு விமென்' திட்­டம் குறித்து வங்கி நேற்று அறி­வித்­தது. இதன்­கீழ் வங்­கி­யின் பல்­வேறு பிரி­வு­களில், முழு­நேர வேலை, பகுதி­நேர வேலை ஆகி­ய­வற்­றுக்­கான வாய்ப்­பு­கள் வழங்­கப்­படும்,

நீக்­குப்­போக்­கான வேலை­களைத் தேடும் பெண்­களை உரிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைக்­கும் வேலை­வாய்ப்பு இணை­யத்­த­ள­மான 'மம்ஸ் அட் வொர்க்' உடன் இணைந்து வங்கி இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளது.

'கிக்+யு விமென்' திட்­டம் மூலம் வேலை­யில் சேரும் பெண்­க­ளுக்கு அதே­போன்ற வேலை­யில் உள்ள மற்­ற­வர்­க­ளுக்கு ஈடாக சம்­ப­ளம், விடுப்பு, மருத்­து­வக் காப்­பீடு ஆகி­யவை வழங்­கப்­படும் என்று வங்கி தெரி­வித்­தது.

இத்­திட்­டத்­தின்­கீழ் வேலை­யில் சேரும் பெண்­க­ளுக்கு அவர்­க­ளது தேவைக்கு ஏற்ப நீக்­குப்­போக்­கான வேலை நேரம் ஒதுக்­கப்­படும்.

விருப்­பப்­படும் பெண்­கள் அரை நாள் வேலை, விரும்­பிய நேரத்­தில் ஈடு­படும் முழு­நேர அல்­லது பகு­தி­நேர வேலை, அவ்­வப்­போது செய்­யும் பணி ஒப்­ப­டைப்­பு­கள் அடிப்­ப­டை­யி­லான வேலை என எதை வேண்­டு­மா­னா­லும் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள இய­லும்.