ஜோகூர் பாரு சோதனைச்சாவடியின் ஒரு பகுதி புதுப்பிப்புக்காக மூடப்படுகிறது

ஜோகூர் பாரு சோதனைச்சாவடியின் ஒரு பகுதி புதுப்பிப்புக்காக மூடப்படுகிறது

1 mins read
14ce6c41-46f0-4662-8290-c7eea4cb08ac
-

உட்­லண்ட்ஸ் பாலம் வழி­யாக ஜோகூர் பாரு செல்­லும் வாக­ன­மோட்­டி­க­ளின் பயண நேரம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

ஜோகூர் பாரு­வின் சுல்­தான் இஸ்­கந்­தர் கட்­டடத்­தில் செயல்­படும் சுங்க, குடி­நு­ழைவு, தனி­மைப்­ப­டுத்­தல் சாவ­டி­யில் (சிஐ­கியூ) கார்­கள் நுழை­வ­தற்­கான டி-பகுதி, புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­காக மூடப்­பட்­டி­ருப்­பது இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் நேற்று ஃபேஸ்புக்­கில் இந்­தத் தக­வலை வெளி­யிட்­டது. சிஐ­கி­யூ­வின் மற்ற பகு­தி­கள் தொடர்ந்து செயல்­படும் என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

புதுப்­பிப்­புப் பணி­கள் எப்­போது நிறை­வ­டை­யும் என்­பது குறித்த தக­வல் ஏது­மில்லை.

புதுப்­பிப்­புப் பணி­கள் நடை­பெ­றும் காலத்­தில் சோத­னைச்­சா­வ­டி­யின் ஏ, பி, சி ஆகிய பகு­தி­கள் தொடர்ந்து சேவை வழங்­கும் என்­பதை ஜோகூர் குடி­நு­ழை­வுத் துறை அதன் ஃபேஸ்புக் பதி­வில் உறு­திப்­படுத்­தி­யுள்­ளது. பய­ணி­கள் இரண்­டா­வது பாலத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­று இரு ஆணை­யங்­களும் நினை­வு­ப­டுத்­தி­யுள்­ளன.