தொழிற்துறை வளர்ச்சி 0.9% அதிகரிப்பு

தொழிற்துறை வளர்ச்சி 0.9% அதிகரிப்பு

1 mins read
f1a1269e-6b21-4143-9776-641089d91e3d
-

எதிர்­பார்த்­த­தை­விட சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித்­தி­றன் கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் சற்று மித­மாக அதி­க­ரித்­தி­ருந்­தது.

முக்­கி­ய­மான மின்­னி­யல் துறை­யில் மூன்­றா­வது மாத­மாக வளர்ச்சி குறைந்­த­தன் பின்­ன­ணி­யில் ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த செப்­டம்­ப­ரில் உற்­பத்தி 0.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யைத் தவிர்த்து கடந்த மாதம் பதி­வான வளர்ச்சி அதி­க­ரிப்பு 2% ஆகும் என்று பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­களில் தெரி­ய­வந்­தது.

இருப்­பி­னும், புளூம்­பெர்க் கணக்­கெ­டுப்­பில் ஆய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்த 1.2% வளர்ச்­சியை கடந்த மாதத்­தின் ஒட்­டு­மொத்த வளர்ச்சி அதி­க­ரிப்பு தொட­வில்லை.

இந்­நி­லை­யில் போக்­கு­வ­ரத்­துப் பொறி­யி­யல், பொது உற்­பத்தி ஆகிய துறை­க­ளால் ஆகஸ்ட் மாத 0.5% அதி­க­ரிப்­பைக் காட்­டி­லும் கடந்த மாத அதி­க­ரிப்பு சற்று மேம்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மா­கக் கரு­தப்­படும் மின்­னி­யல் துறை, ஏற்­று­மதி சார்ந்த உற்­பத்­தித் துறை­யின் 40% வளர்ச்­சிக் கார­ண­மாக மூன்­றா­வது மாத­மாக இத்­துறை சிறிது சரி­வைச் சந்­தித்­துள்­ளது.

மாறாக, தக­வல்­தொ­டர்பு மற்­றும் பய­னா­ளர் மின்­னி­யல் பிரி­வில் 21.8% வளர்ச்சி பதி­வா­னது.

ரசா­ய­னத் துறை வளர்ச்சி ஆண்டு அடிப்­ப­டை­யில் செப்­டம்­ப­ரில் 7.1% குறைந்­தது.

அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­கள் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், எரி­பொ­ருள் பிரிவு உற்­பத்தி 12.1% அதி­க­ரித்­தது.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 22%, உற்­பத்­தித் துறை சார்ந்­த­தா­கும்.