சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய ஆடவர் மிரட்டும் தொனியில் பேசியதால் அவருக்குக் கடும் எச்சரிக்கை கொடுக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மனநலக் கழகத்தின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த பின்னர், ஹியன் டக்கிற்கு கடும் எச்சரிக்கையை கொடுக்க அரசாங்கத் தரப்பு கருதுவதாக அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் லிம் யிங் மின் கூறினார். ஹியன் டக் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று மனநலக் கழகத்தின் சோதனையில் தெரியவந்துள்ளது.
ஹியன் டக்கிற்கு மனச்சிதைவு நோய் உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் ஸ்ட்ரெய்ட் டைம்சிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், விமானத்தில் இருந்த ஒருவரை அறைந்த குற்றச்சாட்டை ஹியன் டக் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
செப்டம்ர் 26ஆம் தேதி அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த எஸ்ஐஏ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டா ஏண்டி ஹியன் டிக் கத்தியுள்ளார். சக பயணி ஒருவரின் கைப்பெட்டியைப் பறிக்க அவர் முயன்றுள்ளார். அவரைத் தடுக்க முயன்ற விமானப் பணியாளரையும் அவர் முகத்தில் அறைந்தார்.

