ஃபேர் பிரைஸ் நிறுவனம் மூன்று அரிசி வகைகளுக்கு 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கும். இந்தச் சலுகை இன்று தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நீடிக்கும். வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கும் மூன்று அரிசி வகைகளுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்தும் தாய்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி வகைகள்.
அவை:
- Songhe AAA Thai Hom Mali அரிசி 5 கிலோகிராம் ($14.35)
- ஃபேர் பிரைஸ் Thai Brown Unpolished அரிசி 5கிலோகிராம் ($9.50)
- Double FP Thai Hom Mali Premium Quality Fragrant அரிசி 10 கிலோகிராம் ($19.90)
இந்த மூன்று அரிசி வகைகளின் விலைகளில் 2020ஆம் ஆண்டிலிருந்து மாற்றம் இல்லை என்று நிறுவனம் கூறியது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு முறையும் நான்கு அரிசி பைகள் வரை வாங்கலாம். அனைத்து ஃபேர் பிரைஸ் கடைகளிலும், ஃபேர் பிரைஸ் நிறுவனத்தின் இணையத்தளத்திலும் குறைந்த விலையில் அரிசியை வாங்கலாம்.
சிங்கப்பூரர்கள் பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க இந்த தள்ளுபடி அளிக்கப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.


