கஞ்சா கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 5 இளையர்கள் கைது

கஞ்சா கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 5 இளையர்கள் கைது

1 mins read
30739358-d12b-4d9b-9208-61b7336a2ca5
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்று கஞ்சா சேர்க்கப்பட்ட உணவு (படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு) -

கஞ்சா கடத்திய சந்தேகத்தின் பேரில் ஐந்து இளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 14க்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து $7,000 மதிப்புள்ள 226 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. கஞ்சா சேர்க்கப்பட்ட உணவு, போதைப் பொருள் தொடர்பான இதர பொருள்களும் கைபற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

கைதுசெய்யபட்டவர்கள் உள்ளூர், வெளிநாட்டுப் பள்ளி மாணவர்கள். அவர்களில் மூவருக்கு 14 வயது. இருவருக்கு 16 வயது.

சிங்கப்பூர் தபால் நிலையத்துக்கு வந்து ஒரு பொட்டலத்தில் போதைப் பொருள் தொடர்புடைய பொருள் இருந்ததை குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் தொடர்பில் 16 வயதுடைய ஒரு பெண்ணும் ஒரு ஆண்ணும் கைதுசெய்யப்பட்டனர். பெண்ணின் வீட்டை சோதனையிட்டதில் 59 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் தனது 14 வயது மகனிடம் இருந்த 115 கிராம் கஞ்சாவை அவனுடைய தந்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதிகாரிகள் அவனுடைய வீட்டை சோதனையிட்டதில் மேலும் 52 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்பில் மேலும் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.