கேபிஇ விரைவுச்சாலை மூடப்பட்டதன் தொடர்பில் லாரி ஓட்டுநரிடம் விசாரணை

கேபிஇ விரைவுச்சாலை மூடப்பட்டதன் தொடர்பில் லாரி ஓட்டுநரிடம் விசாரணை

1 mins read
3b76e728-9d85-47ff-96e2-4386cd237dbe
படம்: YUSRI MOHD/பேஸ்புக் -

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் (கேபிஇ) ஏழு மணிநேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக நம்பப்படும் லாரி ஓட்டுநரை காவல்துறையிரை விசாரித்து வருகின்றனர். லாரியிருந்து கனமான உலோகத் தகுடுகள் சாலையில் விழுந்ததைத் தொடர்ந்து கேபிஇ போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இந்த சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்தது.

லாரியில் தகுடுகள் பாதுகாப்பான முறையில் வைக்க ஓட்டுநர் தவறியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்து திங்கட்கிழமையன்று மாலை 4.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து. சம்பவயிடத்துக்கு சென்ற அதிகாரிகள் சாலையில் பல தகுடுகள் சிதறியிருப்பதைக் கண்டனர். இதனால் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

தகுடுகள் விழுந்ததால் சாலையின் சில பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாக ஆணையம் கூறியது. அதை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்து நள்ளிரவு 12.10 மணிக்கு சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.