முதியோர் வீடுகள் நவம்பரில் விற்பனை

சமூ­கத்­து­டன் சேர்ந்து வாழ்­வற்கு ஏது­வாக குவின்ஸ்வே வட்­டா­ரத்­தில் கட்­டப்­படும் முதி­யோருக்கான 240 சமூ­கப் பரா­ம­ரிப்பு அடுக்குமாடி வீடு­கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரு­கின்­றன.

தேவைக்கு ஏற்ப கட்டி விற்­கப்­படும் திட்­டத்­தின் (பிடிஒ) ஒரு பகுதி­ யாக இந்த விற்­பனை இடம்­பெ­று­கிறது. முதி­யோர் வசிப்­ப­தற்கு ஏற்ற பொது வீட­மைப்­புத் திட்­டம் விற்கப்­ ப­டு­வது இது இரண்­டாவது முறை­யா­கும்.

இதற்கு முன் 2021 பிப்­ர­வ­ரி­யில் புக்­கிட் பாத்­தோக்­கில் இத்­த­கைய வீடு­கள் விற்­ப­னைக்கு வெளி­யி­டப்­பட்­டன.

வீட்­டின் வடி­வ­மைப்பு பற்றி தெரிந்­து­கொள்ள விரும்­பு­வோர் எச்­டிபி ஹப்­பில் இடம்­பெற்­றுள்ள கண்­காட்­சிக்­குச் செல்­ல­லாம்.

இன்று முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை­யில் இந்­தக் கண்­காட்சி நடை­பெ­றும்.

இங்கு சமூ­கப் பரா­ம­ரிப்பு வீடு ­க­ளின் மாதி­ரி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. 32 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் வீடு எப்­ப­டி­யி­ருக்­கும் என்­ப­தைக் காட்­டும் மாதிரி வீடும் அங்கு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

குவின்ஸ்வே கேனபி (Canopy) தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக குவின்ஸ்வே பரா­ம­ரிப்பு வீடு­கள் கட்டப்படுகின்றன. மூவறை, நான்­கறை வீடு­க­ளை­யும் இந்­தத் திட்­டம் உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறது. புக்­கிட் பாத்­தோக் சமூ­கப் பரா­ம­ரிப்பு புளோக்­குக­ளைப் போன்றே இங்­கும் இதர வகை­யான வீடு­கள் கட்­டப்­ப­ட­வில்லை.

2024ஆம் ஆண்­டில் கட்­டு­மா­னத் திட்­டம் நிறை­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பல வகையான வீடு­கள் ஒரே இடத்­தில் கட்­டு­வது பல தலை­முறை களுக்கு இடை­யி­லான பிணைப்பை ஊக்­கு­விக்­கும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் நேற்று தெரி­வித்­தார். முன்­ன­தாக கண்­காட்­சியை அவர் பார்­வை­யிட்­டார்.

சமூ­கப் பரா­ம­ரிப்பு வீடு­கள், குவின்ஸ்­ட­வுன் சுகா­தார வட்டாரத்துக்குள் இடம்­பெற்­று உள்­ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகா­தார அமைச்சு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கூட்டு அறிக்கை தெரி வித்தது. குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஆரோக்­கியமான வாழ்க்­கையைப் பின்­பற்­று­வதை திட்­டம் ஆத­ர­வ­ளிக்­கிறது.

மேலும் அலெக்­சாண்­டிரா மருத்து­வ­ம­னைக்கு அரு­கா­மை­யில் இந்த வீடு­கள் இருப்­ப­தால் சுகா­தா­ரப்­ ப­ரா­மரிப்­பு, மருத்­துவ தேவை களை குடி­யி­ருப்­பா­ளர்­கள் எளிதில் அணுக முடி­யும் என்­றும் அறிக்கை குறிப்­பிட்­டது.

சக்­கர நாற்­காலி நட­மாட்­டத்­துக்கு எளி­தாக இருக்­கும் வகை­யில் வீடு­களில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. 24 மணி நேர­மும் அவ­ச­ரக் கண்­கா­ணிப்பு, அடிப்­படை சுகா­தா­ரப் பரி­சோ­தனை போன்ற சேவை­களும் இங்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. இந்த அடிப்­படை சேவை களுக்கு சந்தா கட்­ட­ணம் ஆண்டுக்கு $2,000.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!