உடல் பருமன் பிரச்சினை; பாலர்களுக்கு பசியறிந்து சாப்பிட கற்பிக்கப்படும்

உடல் பருமன் பிரச்சினை; பாலர்களுக்கு பசியறிந்து சாப்பிட கற்பிக்கப்படும்

2 mins read
c4979bf3-4299-4499-8642-d5114da04173
பாலர்களுக்கு ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை கற்றுத் தரும் புதிய சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. படம்: ஏ*ஸ்டார். -

உடல் பரு­ம­னைச் சமா­ளிப்­பதை இலக்­கா­கக் கொண்ட புதிய சோதனைத் திட்­டம் ஒன்று பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்­காக தொடங்­கப்­ப­டு­கிறது.

இந்­தத் திட்­டத்­தின் கீழ் பசி­ ய­றிந்து உணவு உண்ண பாலர் களுக்கு கற்­றுத்­த­ரப்­படும். உணவு முழு­வ­தை­யும் முடிக்க வேண்­டும் என்ற நெருக்­கு­த­லும் தவிர்க்­கப்­படும்.

நேற்று நடை­பெற்ற குழந்தைகள் மேம்­பாட்டு மாநாட்­டில் புதிய சோதனைத் திட்­டம் பற்றி அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஆறு குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் திட்­டம் முன்னோட்டமாகச் சோதிக்­கப்­படும். மூன்று வயது முதல் ஆறு வயது வரை­யி­லான 205 குழந்­தை­களும் அவர்­க­ளு­டைய பரா­ம­ரிப்­பா­ளர்­களும் இதில் பங்­கேற்­க­வி­ருக்­கின்­ற­னர்.

பசிக்­கான கரு­விப்­பெட்டி என்­பது (The Appetite Toolbox-ATB) திட்­டத்­தின் பெயர். 'கஸ்டோ' என்று குறிப்­பி­டப்­படும் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கையை நோக்­கிய வளர்ச்சி எனும் ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்ட அம்­சங்­களை வைத்து திட்­டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நீள­மான ஆய்­வில், அதிக அளவு உணவை வேக­மா­கச் சாப்­பி­டு­வ­தற்­கும் அதிக உணவு உட்­கொள்­வ­தற்­கும் தொடர்பு இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அது மட்­டு­மல்­லா­மல் பாலர் பள்ளி ஆண்­டு­களில் ஆரோக்­கி­ய­மற்ற உடல் எடையை அதி­க­ரிப் ­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் இருப்­ ப­தை­யும் ஆய்வு சுட்­டிக்­காட்­டி­யது.

ஏ*ஸ்டார் சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த முயற்சிக்கான நிலையம், பிசிஎஃப் ஸ்பார்க்கல் டாட்ஸ் ஆகியவற்றுக்கு இடையி லான பங்காளித்துவத்தில் ஏடிபி சோதனை திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

மாநாட்டில் உரையாற்றிய சமு தாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நோய்த் தடுப்பை நோக்கி நமது கவனம் திசை திரும்பியிருக்கும் வேளையில் குழந்தைகள் உடல் நலத்துக்கான ஆய்வு மற்றும் முயற்சிகள் இடம்பெறு வதாக தெரிவித்தார்.

ஆய்வின் முடிவுகள் மூலம் பயனுள்ள தாக்கங்களை ஏற்படுத்த லாம் என்றார் அவர்.

"பிரச்சினைகள் வரும் வரை காத்திருக்காமல் எச்சரிக்கை அறி குறிகளை முன்கூட்டியே அறிந்து செயல்பட்டால் பெரிய பிரச்சினை களை தடுக்கலாம்," என்று முஸ்லிம் விவகாரங்களுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மேலும் தெரி வித்தார். மாநாட்டில் நடைபெற்ற கலந்து ரையாடலில் பேசிய சுகாதாரத் துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், உணவின் அளவும் வேகமாகச் சாப்பிடுவதும் உடல் பருமனுக்கு எப்படி பங்களிக்கிறது என்பதை கஸ்டோ போன்ற ஆய்வு முடிவுகள் காட்டுவதாக தெரிவித் தார். இந்தக் கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதை கற்றுக் கொடுக்க பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்றார்.

இதே அங்கத்தில் பேசிய சமு தாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர்  ஷுவெலிங், குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களுடைய துணைப்பாட வகுப்புகளுக்கு பெற் றோர் அதிகம் செலவழிக்கின்றனர். அதே சமயத்தில் குழந்தைகளின் ஆரம்பக்கால வாழ்க்கையும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.