உடல் பருமனைச் சமாளிப்பதை இலக்காகக் கொண்ட புதிய சோதனைத் திட்டம் ஒன்று பாலர் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பசி யறிந்து உணவு உண்ண பாலர் களுக்கு கற்றுத்தரப்படும். உணவு முழுவதையும் முடிக்க வேண்டும் என்ற நெருக்குதலும் தவிர்க்கப்படும்.
நேற்று நடைபெற்ற குழந்தைகள் மேம்பாட்டு மாநாட்டில் புதிய சோதனைத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள ஆறு குழந்தை பராமரிப்பு நிலையங்களில் திட்டம் முன்னோட்டமாகச் சோதிக்கப்படும். மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான 205 குழந்தைகளும் அவர்களுடைய பராமரிப்பாளர்களும் இதில் பங்கேற்கவிருக்கின்றனர்.
பசிக்கான கருவிப்பெட்டி என்பது (The Appetite Toolbox-ATB) திட்டத்தின் பெயர். 'கஸ்டோ' என்று குறிப்பிடப்படும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய வளர்ச்சி எனும் ஆய்வில் கண்டறியப்பட்ட அம்சங்களை வைத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நீளமான ஆய்வில், அதிக அளவு உணவை வேகமாகச் சாப்பிடுவதற்கும் அதிக உணவு உட்கொள்வதற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் பாலர் பள்ளி ஆண்டுகளில் ஆரோக்கியமற்ற உடல் எடையை அதிகரிப் பதற்கான சாத்தியக்கூறுகள் இருப் பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியது.
ஏ*ஸ்டார் சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த முயற்சிக்கான நிலையம், பிசிஎஃப் ஸ்பார்க்கல் டாட்ஸ் ஆகியவற்றுக்கு இடையி லான பங்காளித்துவத்தில் ஏடிபி சோதனை திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய சமு தாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நோய்த் தடுப்பை நோக்கி நமது கவனம் திசை திரும்பியிருக்கும் வேளையில் குழந்தைகள் உடல் நலத்துக்கான ஆய்வு மற்றும் முயற்சிகள் இடம்பெறு வதாக தெரிவித்தார்.
ஆய்வின் முடிவுகள் மூலம் பயனுள்ள தாக்கங்களை ஏற்படுத்த லாம் என்றார் அவர்.
"பிரச்சினைகள் வரும் வரை காத்திருக்காமல் எச்சரிக்கை அறி குறிகளை முன்கூட்டியே அறிந்து செயல்பட்டால் பெரிய பிரச்சினை களை தடுக்கலாம்," என்று முஸ்லிம் விவகாரங்களுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மேலும் தெரி வித்தார். மாநாட்டில் நடைபெற்ற கலந்து ரையாடலில் பேசிய சுகாதாரத் துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், உணவின் அளவும் வேகமாகச் சாப்பிடுவதும் உடல் பருமனுக்கு எப்படி பங்களிக்கிறது என்பதை கஸ்டோ போன்ற ஆய்வு முடிவுகள் காட்டுவதாக தெரிவித் தார். இந்தக் கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதை கற்றுக் கொடுக்க பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இதே அங்கத்தில் பேசிய சமு தாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் ஷுவெலிங், குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களுடைய துணைப்பாட வகுப்புகளுக்கு பெற் றோர் அதிகம் செலவழிக்கின்றனர். அதே சமயத்தில் குழந்தைகளின் ஆரம்பக்கால வாழ்க்கையும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.

