ஃபேர்பிரைஸ் அறிவிப்பு: மூவகை அரிசிகளுக்கு 15% கழிவு

ஃபேர்பிரைஸ் அறிவிப்பு: மூவகை அரிசிகளுக்கு 15% கழிவு

2 mins read
d8ef5a7c-1f68-4a2e-8fe8-b242fb5d4bac
மூன்று வகை அரிசி பைகளுக்கு விலையில் 15% குறைக்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்துள்ளது. படம்: ஃபேர்பிரைஸ் -

மூன்று வகை­யான அரி­சி­க­ளுக்கு 15 விழுக்­காடு கழிவு வழங்­கப்­படும் என்று தீவு முழு­வ­தும் பேரங்­கா­டி­களை நடத்­தும் ஃபேர்பி­ரைஸ் அறி­வித்­துள்­ளது.

இத­னால் வழக்­க­மான விலை­யை­விட மூன்று வகை­ அரி­சியை குறை­வான விலைக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் வாங்­க­லாம்.

இச்­ச­லுகை நவம்­பர் 9ஆம் தேதி வரை நீடிக்­கும் என்று ஃபேர்பி­ரைஸ் தெரி­வித்­துள்­ளது.

சோங்ஹி ஏஏஏ தாய் ஹோம் மாலி ஐந்து கிலோ அரிசிப் பை, ஃபேர்பி­ரைஸ் தாய் பிர­வுன் பட்டை தீட்­டப்­ப­டாத ஐந்து கிலோ அரிசிப் பை அல்­லது டபிள் ஃபேர்பி­ரைஸ் தாய் ஹோம் மாலி பிரி­மி­யம் குவா­லிட்டி ஃபிராகி­ரண்ட் பத்து கிலோ பை ஆகி­ய­வற்­றில் ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ள­ரும் நான்கு அரிச பைகள் வரை சலுகை விலை­யில் வாங்க முடி­யும்.

சோங்ஹி ஐந்து கிலோ அரிசிப் பையின் வழக்­க­மான விலை $16.90. ஆனால் சலுகை விலை­யில் அது $14.35க்கு விற்­கப்­படும்.

ஃபேர்பி­ரைஸ் ஐந்து கிலோ பிரவுன் அர­சி­யின் விலை கழி­வுக்­குப் பிறகு $9.50ஆக இருக்­கும்.

இது, வழக்­க­மான $11.20 விலை­யி­லி­ருந்து குறைக்­கப்­பட்­டுள்­ளது.

டபிள் ஃபேர்பி­ரைஸ் 10 கிலோ அரிசிப் பை $23.65 விலைக்­குப் பதி­லாக $19.90க்கு விற்­கப்­படும்.

நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் அன்­றா­டத் தேவை­களில் பண­வீக்­கத்­தின் தாக்­கத்தை குறைக்­கும் முயற்­சி­யாக இந்த மூன்று வகை அரி­சி­யின் விலை 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து மாற­வில்லை என்று ஃபேர்பி­ரைஸ் குறிப்­பிட்­டது.

ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியான விபுல் சாவ்லா, சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அரிசி ஒரு முக்கிய அடிப்படைத் தேவையாகும் என்றார்.

கடந்த மாதம் பணவீக்கம் 5.3 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. உணவு, சேவை, சில்லறை, இதர பொருட்களின் விலை அதிகரித்த தே இதற்கு காரணம் என்று தெரி விக்கப்பட்டது.