மெர்சிடிஸ் காட்சியகம் உட்பட நான்கு சொத்துகளை சைக்கிள் அண்ட் கேரேஜ் விற்கிறது

மெர்சிடிஸ் காட்சியகம் உட்பட நான்கு சொத்துகளை சைக்கிள் அண்ட் கேரேஜ் விற்கிறது

2 mins read
671dab64-c4e0-4ee2-bc10-aacfd2042062
-

சைக்­கிள் அண்ட் கேரேஜ் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் தனது நான்கு சொத்துகளை எம்­அண்ட்ஜி சொத்து நிறு­வ­னத்­துக்கு விற்­றுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இதற்கு எவ்­வ­ளவு தொகை கைமாறி­யது என்­பது குறித்து விவரமில்லை. மெர்­சி­டிஸ்-பென்ஸ் நிலை­யத்­தை­யும் அலெக்­சாண்­டி­ரா­வில் உள்ள ஜேர்­டின் சைக்­கிள் அண்ட் கேரேஜ் தலை­மை­ய­கத்­தை­யும் உள்­ள­டக்­கிய நான்கு சொத்­து­களும் ஆண்­டுக்கு 26 மில்­லி­யன் வெள்­ளிக்கு குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ள­­தாக விவ­ர­ம­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. எண் 209 பாண்­டான் கார்­டன்­சில் உள்ள மெர்­சி­டிஸ்-பென்ஸ் வர்த்­த­கக் காட்­சி­ய­கம், எண் 188 பாண்­டான் லூப்­பில் உள்ள பய­ணி­கள் மற்­றும் கன­ரக வாக­னங்­களுக்­கான மெர்­சி­டிஸ்-பென்ஸ் சேவை நிலை­ய­மும் இதர இரண்டு சொத்து­க­ளா­கும். இது பற்றி விளக்­கம் கேட்­ட­போது, "எங்­க­ளு­டைய மூல­த­னத்தை மேம்­ப­டுத்­தும் தொடர்ச்­சி­யான நட­வ­டிக்­கை­களில் வாய்ப்­பு­களை ஆராய்ந்து வரு­கி­றோம்," என்று சைக்­கிள் அண்ட் கேரி­யஜ் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஒழுங்­கு­முறை அமைப்­பு­க­ளின் ஒப்­பு­த­லு­டன் நிபந்­த­னை­யு­டன்­கூ­டிய விற்­பனை மற்­றும் குத்­தகை ஏற்­பாட்டை சைக்­கிள் அண்ட் கேரேஜ் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் செய்­து­கொண்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

"இந்த ஏற்­பட்­டால் சிங்­கப்­பூ­ரில் உள்ள நட­வ­டிக்­கை­களில் மாற்­ற­மி­ருக்­காது. சிங்­கப்­பூ­ரில் எங்­க­ளு­டைய மோட்­டார் வாக­னத் தொழில் நன்கு வேரூன்றி உள்­ளது.

"வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் பங்­கா­ளி­களு­ட­னான எங்­க­ளு­டைய உறவு நீண்­ட­கா­லம் நீடிக்­கிறது.

"எங்­க­ளு­டைய செயல்­பா­டு­கள், எங்­க­ளுடைய கொள்­கை­கள், வாடிக்­கை­யா­ளர்­கள், எங்­க­ளு­டைய தொழி­லா­ளர்­கள் ஆகி­ய­வற்­றில் இங்­கும் இவ்­வட்­டா­ரத்­தி­லும் கடப்­பாட்­டு­டன் இருக்­கி­றோம்," என்­றார் அவர்.

சைக்­கிள் அண்ட் கேரேஜ் சிங்கப்பூர், சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட முத­லீட்டு நிறு­வ­ன­மான ஜேர்­டின் சைக்­கிள் அண்ட் கேரேஜ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது.

சைக்­கிள் அண்ட் கேரேஜ் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தி­ட­முள்ள குறிப்­பிட்ட சொத்­து­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடை­பெற்று வரு­வதை ஸ்ட்­ரெயிட்ஸ் டைம்­சி­டம் எம்­அண்ட்ஜி நிறு­வ­னம் உறுதி செய்­துள்­ளது. இதற்­கி­டையே முன்பு டைம்­லெர் சவுத்-ஈஸ்ட் ஏசியா என்று அழைக்­கப்­பட்ட ஜெர்­மா­னிய கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மெர்­சி­டிஸ்-பென்ஸ் சிங்­கப்­பூர், விற்­பனை குறித்து அறிந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. "எங்­க­ளு­டைய விற்­பனை முனை­யங்­க­ளு­டன் தொடர்­பு­டைய சைக்­கிள் அண்ட் கேரேஜ் சிங்­கப்­பூர் சொத்­து­க­ளின் உத்­தேச விற்­ப­னையை அறிந்­துள்­ளோம். எங்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­களை இது பாதிக்­காது," என்று மெர்­சி­டிஸ்-பென்ஸ் சிங்­கப்­பூர் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.