சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள பாலஸ்தீன பிரதமர் டாக்டர் முஹம்மட் ஷ்ட்டாயே பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
முன்னதாக அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் அவர் சந்தித்தார்.
அப்போது, பாலஸ்தீன மனித வள மேம்பாட்டுக்கு கல்வி உதவித்தொகை, பயிற்சித் திட்டங்கள், அதிக பாலஸ்தீன அதிகாரிகளை பயிற்சிகளில் பங் கேற்க அழைப்பது போன்றவற்றின் மூலம் சிங்கப்பூர் அதிக ஆதரவு அளிக்கும் என்று அதிபர் ஹலிமா கடப்பாடு தெரிவித்தார்.
பாலஸ்தீன ஆணையத்துடன் சிங்கப்பூர் நல்லுறவு கொண்டு உள்ளது.
'ETAP' எனும் மேம்பட்ட தொழில்நுட்ப உதவி திட்டத்தின் மூலம் மக்கள் திறனை மேம் படுத்தும் பாலஸ்தீன முயற்சி களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் ஏறக் குறைய 600 பாலஸ்தீன அதி காரிகள் சிங்கப்பூரில் நடந்த பயிற்சிகளில் பங்கேற்று உள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டில் 'ETAP' திட்டம் தொடங்கப்பட்டது.

