கொவிட் -19 பரவல் சூழலில், முகக்கவசம் அணியத் தவறிய தாகக் கூறப்படும் "சுய ஆதிபத்தியம் உள்ள குடிமகன்" என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர், நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு தகுதியானவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மனநலக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மனநலப் பரிசோதனையில், 57 வயதான அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைக்கவும் வழக்கைத் தொடர்ந்து கவனிக்கவும் தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டது.
அப்துல் ரஷித் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு நவம்பர் 30 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் அப்துல் ரஷீத் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அப்துல் ரஷீத் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது முகக்கவசம் அணிய மறுத்த பிரிட்டிஷ் குடிமகன் பெஞ்சமின் கிளின்னின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் தோன்றினார்.
அவர் பிலிப்பினா ஹசியெண்டா அரசின் வழக்கறிஞராக பணிப்புரிவதாக கூறிக்கொண்டார். ஆனால், தமக்கு வழக்கறிஞர் உரிமம் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

