900 மோசடிகள் தொடர்பில் 310 பேரிடம் விசாரணை

900 மோசடிகள் தொடர்பில் 310 பேரிடம் விசாரணை

1 mins read
2eba6d15-46bf-4ca5-8781-d1700555e1f4
-

ஏறக்குறைய 900 மோசடி சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மொத்தம் 310 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த மோசடிகளில் $5.8 மில்லியனுக்கும் அதிக தொகையை மக்கள் இழந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணைய வர்த்தகம், முதலீடுகள், வேலை, தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான மோசடிகள், அரசாங்க, சீன நாட்டு அதிகாரிகள் போன்று நடித்து ஏமாற்றியது, போலி மின்னஞ்சல் மோசடிகள் ஆகியவை அந்த சட்டவிரோத செயல்களில் உள்ளடங்கும் என்று காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.