தொழில் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்த சாமுவெல் சியோவ் என்ற வழக்கறிஞர் தனது முந்திய சட்ட அலுவலகத்தில் தனக்குக்கீழ் வேலை பார்த்த ஒருவரின் நெற்றியில் விரலால் குத்தித் தள்ளினார். பெண் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கினார்.
அவருக்கு நேற்று நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தனது உறவினரான பிராண்டா கோங் ஷின் யிங், 26, என்ற வழக்கறிஞரைத் தாக்கியதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

