குடித்துவிட்டு டாக்சி ஓட்டுநரை தாக்கியவருக்குத் தண்டனை

1 mins read
6bd908a2-4665-4987-a3df-ed5d85fbf3b0
-

ஸூக் இரவு நேர கேளிக்கை விடுதியில் மதுபானம் அருந்திய ஆடவரும் அவரின் நண்பரும், பெர்னார்ட் சான், 44, என்ற டாக்சி ஓட்டுநரைத் தாக்கினர். இந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் நிகழ்ந்தது. தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் தனது வாகனத்தை ரிவர் வேலி ரோட்டில் நிறுத்தி வைத்து இருந்தார்.

திரு சானுக்கு வேண்டுமென்றே காயம் விளை வித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட கோ லியாங் சாய், 30, என்பவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருந்த முகம்மது தாலெப் கிஷன், 31, என்பவருக்கு டாக்சி ஓட்டுநரைத் தாக்கியதற்காகவும் இதர குற்றச் செயல்களுக்காகவும் இந்த மாதம் 10ஆம் தேதி 17 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடத்தபோது குற்றவாளி கோவுக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் கெய்த் திருமாறன் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் சேவையை ஆற்றும்போது எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துகள் அதிகம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.