பணவீக்கம், வட்டி விகிதம் ஏற்றத்தால் வீவக மறுவிற்பனை விலை அதிகரிப்பு மெதுவடைந்தது

பணவீக்கம், வட்டி விகிதம் ஏற்றத்தால் வீவக மறுவிற்பனை விலை அதிகரிப்பு மெதுவடைந்தது

2 mins read
fa4e9061-4d10-4b19-b2e0-e07379cee771
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை தொடர்ந்து பத்­தா­வது காலாண்­டாக ஏற்­றம் கண்­டுள்­ளது.

இருப்­பி­னும், பண­வீக்­கம் மற்­றும் வட்டி விகி­தம் ஏற்­றத்­தால் மறு­விற்­பனை விலை அதி­க­ரிப்பு மெது

­வ­டைந்­தது. இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் அது 2.6 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

இரண்­டாம் காலாண்­டில் மறு­விற்­பனை விலை அதி­க­ரிப்பு 2.8 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

அதி­க­ரித்து வரும் விலை­வா­சி ­யால் வீடு வாங்­கு­வோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சொத்து நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

இது அவர்­க­ளது பொரு­ளா­தார நிலையைப் பிர­தி­ப­லிப்­ப­தாக அவர்­கள் கூறி­னர்.

"அதி­க­ரித்து வரும் பண­வீக்­கம் கார­ண­மாக, விலை அடிப்­ப­டை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் வாங்­கக்­கூ­டிய மறு­விற்­பனை வீடு­கள் தொடர்­பான தெரி­வு­கள் குறை­யும். இது பெரும்­பா­லும் நடுத்­தர, குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குப் பொருந்­தும். வீவக மறு­விற்­பனை வீடு­கள் வாங்­கு­வோ­ரில் இவர்­களே அதி­கம்," என்று ஆரஞ்­சுடீ அண்ட் டாய் சொத்து முக­வை­யின் ஆய்வு, பகுப்­பாய்­வுப் பிரிவின் மூத்த உத­வித் தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்­தார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி­யன்று நடப்­புக்கு வந்த சொத்து விலை ஏற்­றத்­தைத் தணிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளின் கார­ண­மாக இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டில் வீட்டு விலை­கள் தொடர்ந்து குறை­யும் என்று சொத்து நிபு­ணர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். குறைந்­தது $1 மில்­லி­யன் வெள்­ளிக்கு விற்­ப­னை­

யா­கும் வீவக மறு­விற்­பனை வீடு­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் என்று அவர்­கள் நம்­பு­கின்­ற­னர்.

வீவக கட­னின் அதி­பட்ச வரம்பு குறைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் வீடு வாங்­கு­வோர் விற்­போர் தங்­கள் எதிர்­பார்ப்­பு­க­ளைக் குறைத்­துக்­கொள்­வர் என்­றும் இத­னால் வீட்டு விற்­பனை மெது­வ­டை­யும் என்­றும் புரோப்­பர்ட்­டி­கு­ரு­வின் சிங்­கப்­பூர் பிரிவு மேலா­ளர் டான் டீ கூன் கூறி­னார். வீவக கட­னுக்­கான அதி­பட்ச வரம்பு 85 விழுக்­காட்­டி­லி­ருந்து 80 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் தனி­யா­ர் வீடு உரி­மை­யா­ளர்­கள் வீவக மறு­விற்­பனை வீடு வாங்க விரும்­பி­னால் தங்­கள் தனி­யார் வீட்டை விற்ற பிறகு 15 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் மொத்­தம் 7,546 வீவக மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் மொத்­தம் 6,819 வீவக மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றின.

வீவக கடன்­க­ளின்­கீழ் வழங்­கப்­படும் நிலை­யான வட்டி விகி­தம்­தான் பாது­காப்­பா­னது என்று வீவக மறு­விற்­பனை வீடு வாங்­கு­வோர் கரு­து­வ­து இந்­நி­லைக்­குக் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று ஒன் குளோ­பல் குழு­மத்­தின் மூத்த பகுப்­பாய்­வா­ளர் மோகன் சந்­தி­ர­சே­க­ரன் தெரி­வித்­தார்.