வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தனியார் வீடுகளின் விலை, எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக அதிகரித்தது.
தனியார் வீடுகளின் விலை ஏற்றம் 3.8 விழுக்காடாகப் பதிவானது.
புறநகர் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட கொண்டோமினியம் எனும் கூட்டுரிமை வீடுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் கூட்டுரிமை வீடுகளின் விலை ஏற்றம் கண்டது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 3.4 விழுக்காடு முன்னுரைப்பைவிட தனியார் வீடுகளின் விலை அதிகரித்தது.
தொடர்ந்து பத்து காலாண்டு
களாக தனியார் வீடுகளின் விலை அதிகரித்திருப்பதற்கு கூட்டுரிமை வீடுகளின் விலை ஏற்றம் முக்கிய காரணம் என்று ஆணையம் தெரிவித்தது.
கூட்டுரிமை வீடுகளின் விலை 4.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.
தனியார் தரை வீடுகளின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் தனியார் வீடுகளின் விலை ஏற்றத்தை இது சற்று பாதித்தது.
இருப்பினும், ஒட்டுமொத்த அடிப்படையில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் வீடுகளின் விலை 8.2 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அது 5.3 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது.
புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் வீடுகளின் விலை ஆக அதிகமாக 7.5 விழுக்காடு
அதிகரித்தது.

