அறிமுகத் திட்டத்தின்கீழ் நான்கு உள்ளூர் பண்ணைகள் அவற்றின் காய்கறிகளை ஒன்பது ஃபேர்
பிரைஸ் பேரங்காடிகளில் விற்க இருக்கின்றன.
இதன்மூலம் சில்லறை வர்த்தகச் சந்தைக்குள் அடியெடுத்து வைக்கும்போது ஏற்படும் சவால்
களைச் சந்திக்க பண்ணைகளுக்கு அனுபவம் கிட்டும்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் திட்டத்தில் ஃபேர்பிரைஸ் நிறு
வனம் இணைந்துள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட சில உள்ளூர் பண்ணைகளுக்கு அவற்றின் காய்கறிகளை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்க வாய்ப்பு கிடைக்கும். இந்த அறிமுகத் திட்டம் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும்.
ஃபேர்பிரைசின் 11வது 'மேட் இன் சிங்கப்பூர்' சந்தையின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அப்போது திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் நடைபெற்ற தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
"உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விவகாரம். இது
தொடர்பாக பல நாடுகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. புவிசார் அரசியல் நெருக்கடிநிலை, பருவநிலை மாற்றம் ஆகியவை உலகளாவிய உணவு விநியோகங்களை அதிக அளவில் பாதித்துள்ளன," என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
சிங்கப்பூர் தனக்குத் தேவையான உணவுப்பொருள்களில் 90 விழுக்காட்டை வெளிநாடுகளி
லிருந்து இறக்குமதி செய்வதை அவர் சுட்டினார்.
எனவே, உணவு விநியோகங்களில் இடையூறு ஏற்படும்போது சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
உணவு விநியோக இடையூறுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உணவுக்கான மூலங்
களைப் பல்வகைப்படுத்துதல் முக்கியம் என்றார் அவர். சிங்கப்பூருக்குத் தேவையான உணவுப்பொருள்களை உள்ளூரிலேயே தயாரிப்பது அதில் அடங்கும் என்றார் அவர்.
அறிமுகத் திட்டத்தின்கீழ் நெக்ஸ் ஃபார்மர், லிவ்ஃபிரேஷ், கோஃபார்ம், ஜிகேஇ ஆகிய பண்ணைகளுக்கு ஃபேர்பிரைஸ் ஆதரவு வழங்கும்.
இந்த உள்ளூர் பண்ணைகளின் காய்கறிகள் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்கப்படும்.
ஜெம், விவோசிட்டி, பார்க்வே பரேட், தாம்சன் பிளாசா, புக்கிட் தீமா பிளாசா, கோஸ்வே பாயிண்ட், அவர் தெம்பனிஸ் ஹப், நார்த்
பாயிண்ட் சிட்டி, ஹிலியன் மால் ஆகிய கடைத்தொகுதிகளில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் இந்த நான்கு உள்ளூர் பண்ணைகளின் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். அவற்றின் காய்கறிகளை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்பதன் மூலம் பண்ணைகளின் வர்த்தக அறிவும் வளரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, பயனீட்டாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து இந்தத் திட்டம் வாயிலாக இப்பண்ணைகள் கற்றுக்கொள்ளும்.
இந்தப் பண்ணைகளுக்குப்
பயனீட்டாளர்களிடமிருந்தும் ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் ஃபூவும் ஃபேர்பிரைஸ் குழுமத் துணைத் தலைவர் சியா கியன் பெங்கும் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்த நான்கு பண்ணைகளும் இத்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதலை ஃபேர்பிரைஸ் வழங்கியது.