விபத்தில் சிக்கிய ஒன்பது வாகனங்கள்; இருவர் காயம்

காலாங்­பாய லேபார் விரை­வுச்­

சா­லை­யில் நேற்று முன்தினம் விபத்து நிகழ்ந்­தது. இதில்

ஒன்­பது வாக­னங்­கள் ஒன்­றோடு ஒன்று மோதிக்­கொண்­டன.

விபத்­தில் எட்டு கார்­களும் ஒரு வேனும் சிக்­கின. தெம்­ப­னிஸ் விரை­வுச்­சா­லையை நோக்­கிச் செல்­லும் பாதை­யில் பார்ட்லி ரோடு ஈஸ்ட் நுழை­வா­யி­லை அடுத்து விபத்து நிகழ்ந்­தது.

விபத்து குறித்து மாலை 4.45 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

விபத்­துக்­குள்­ளான கார்­களில் ஒன்­றின் ஓட்­டு­ந­ரான 40 வயது பெண்­ணும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட இரு­வ­ரும் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. விபத்­துக்­குள்­ளான இரண்டு கார்­க­ளின் ஓட்­டு­நர்­களும் வேன் ஓட்­டு­ந­ரும் விசா­ர­ணை­யில் உதவி வரு­கின்­ற­னர்.

விபத்­துக்­குள்­ளான வாக­னங்

­­க­ளைக் காட்­டும் காணொளி நேற்று சிங்­கப்­பூர் 'சிங்கப்பூர் ரோட் எக்ஸிடெண்ட்' ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

விரை­வுச்­சா­லை­யின் இட­து பக்­கத்­தி­லி­ருந்து இரண்­டா­வது தடத்­தில் அந்த வாக­னங்­கள் ஒன்­றின் பின் ஒன்று இருந்­ததை அந்­தக் காணொளி காட்­டி­யது.

இதற்­கி­டையே, காலாங்­பாய லேபார் விரை­வுச்­சா­லை­யி­லி­ருந்து நிக்­கல் ஹைவேக்கு வெளி­யே­றும் இடத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த லாரி­யி­லி­ருந்து கன­மான பல உலோ­கத் தக­டு­கள் விழுந்­த­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் அப்­ப­குதி ஏழு மணி நேரத்­துக்கு மூடப்­பட்­டது. லாரி ஓட்­டு­ந­ரி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!