தனியாகவும் குழுவாகவும் வேலை செய்ய ஏதுவான இடம் மார்சிலிங்கில் திறப்பு; உட்லண்ட்ஸ், பாய லேபாரிலும் திறக்கப்படும்

தனியாகவும் குழுவாகவும் வேலை செய்ய ஏதுவான இடம் மார்சிலிங்கில் திறப்பு; உட்லண்ட்ஸ், பாய லேபாரிலும் திறக்கப்படும்

2 mins read
7d1e37e3-f449-4bb2-b1b1-bb14176d2c1e
தனியாக அல்லது மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்ய ஏதுவான இடத்தை மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் ஸ்டேஷன் நிறுவனம் கட்டியுள்ளது. புதிய இடத்தை மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று திறந்துவைத்தார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனி­யாக வேலை செய்ய விரும்­பு­

ப­வர்­க­ளுக்­கும் நண்­பர்­கள் அல்­லது சக ஊழி­யர்­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து வேலை செய்ய விழை­ப­வர்­க­ளுக்­கும் மார்­சி­லிங் எம்­ஆர்டி நிலை­யத்­தில் புதி­தாக இடம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய உள்­ளூர் நிறு­வ­ன­மான ஸ்டேஷன் இவ்விடத்தைக் கட்டியது. இவ்விடத்தை தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று பிற்பகல் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்தார்.

புதிய இடத்­தில் 30 பேர் அமர்ந்து வேலை செய்­யத் தேவை­யான

வச­தி­கள் உள்­ளன.

இதுவே ஸ்டே­ஷன் நிறு­வ­னத்­தின் முதல் வாழ்­வி­யல் தொடர்­பான இட­மா­கும்.

ஸ்டே­ஷன் நிறு­வ­னம் திறந்­து­வைத்­துள்ள வச­தி­க­ளைப் பயன்

­ப­டுத்த விரும்­பு­வோர் அதற்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த வேண்­டும்.

குறைந்­த­பட்ச விலை, ஒரு மணி நேரத்­துக்கு $4.90. இந்­தத் தொகையைச் செலுத்­தி­விட்டு அங்­கி­ருக்­கும் ஒரு மேசை­யைப் பயன்

ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இணை­யம் மூலம் முன்­ப­திவு செய்­துக்­கொள்­ள­லாம்.

ஒருநாள் முழு­வ­துக்­கு­மான கட்­ட­ணத்­தின் விலை $29 ஆகும். ஒரு நாள் கட்­ட­ணம் செலுத்­து­வோர் அங்கு வழங்­கப்­படும் பானங்­களை எவ்­வ­ளவு வேண்­டு­மா­னா­லும் அருந்­த­லாம்.

$299 கட்­ட­ணம் செலுத்தி மாதாந்­தி­ரப் பயன்­பாட்டு அட்­டை­யை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அது­மட்­டு­மல்­லாது, மணிக்கு $39 செலுத்தி கலந்­து­ரை­யா­டல் அறை­களை முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.

தனி­யாக அமர்ந்து வேலை செய்ய விரும்­பு­வோ­ருக்­கா­கவே ஏற்­பாடு செய்­யப்­பட்ட சிறு அறை

­க­ளுக்­கான ஒருநாள் கட்­ட­ணம் $59. அடுத்த ஆண்டு உட்லண்ட்ஸ், பாய லேபார் ஆகிய வட்டாரங்களிலும் இதுபோன்ற இடங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டில் வேலை செய்ய சரியான சூழல் இல்லாவிடில் வீட்டிற்கு அருகிலேயே இத்தகைய இடங்களை அமைத்துத் தர ஸ்டேஷன் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.