சிங்கப்பூருக்குத் தொடர்ந்து சுமத்ராவில் இருந்து எரிவாயு

சிங்கப்பூருக்குத் தொடர்ந்து சுமத்ராவில் இருந்து எரிவாயு

2 mins read
632054af-bb9c-40e9-965a-249409cc7da4
தென் சுமத்ராவில் இருந்து குழாய் மூலம் எரிவாயு விநியோகத் திற்காக இந்தோ னீசியாவும் சிங்கப்பூரும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

அடுத்த ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் புதிய உடன்பாடு கையெழுத்து

சிங்­கப்­பூ­ருக்கு அடுத்த ஆண்டு முதல் இந்­தோ­னீ­சி­யா­வின் தென் சுமத்­ரா­வில் இருந்து புதிய ஐந்­தாண்­டு உடன்­பாட்­டின்­கீழ் எரி­வாயு விநி­யோ­கிக்­கப்­படும் என்று இந்­தோ­னீ­சி­யா­வின் எரி­சக்தி, சுரங்­க­வ­ளத் துறை அமைச்­சர் அரி­ஃபின் டாஸ்­ரிஃப் தெரி­வித்­தார்.

தென் சுமத்­ரா­வில் இருந்து குழாய் மூலம் எரி­வா­யுவை அனுப்பு ­வ­தற்­கான புதிய உடன்­பாடு தொடர்­பில் இரு நாடு­களும் பேச்­சு­வார்த்தை நடத்தி வந்தன.

தென் சுமத்­ரா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு இயற்கை எரி­வா­யுவை விநி­யோ­கிக்­கும் இப்­போ­தைய 20 ஆண்­டு­கா­ல­ விற்­பனை உடன்­பாடு அடுத்த ஆண்டு காலா­வ­தி­யா­கும்.

அதற்­குப் பிற­கும் சிங்­கப்­பூ­ருக்கு தென் சுமத்­ரா­வில் இருந்து தொடர்ந்து எரி­வாயு அனுப்­பப்­படும் என திரு அரி­ஃபின் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

சிங்­கப்­பூர் தன்­னு­டைய தொழில்­து­றை­க­ளுக்­கும் மின்­சக்தி உற்­பத்­திக்­கும் எரி­வா­யு­வையே அதி­கம் சார்ந்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் மின் தேவை­யில் 95 விழுக்­காடு இயற்கை எரி­வா­யு­வைப் பயன்­ப­டுத்­தியே தயா­ரிக்­கப்­படு­கிறது. இந்­தோ­னீ­சியா இரண்டு வழித்­தட குழாய்­கள் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு எரி­வா­யுவை விநி­யோ­கிக்­கிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, மேற்கு நட்­டு­னா­வில் இருந்து சிங்­கப்­பூருக்கு வேறு ஓர் உடன்­பாட்­டின் கீழ் எரி­வாயு வருகிறது.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வார நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட இந்­தோ­னீ­சிய அமைச்­சர், தனிப்­பட்ட பேட்டி ஒன்­றை­யும் அளித்­தார். தென் சுமத்ரா எரி­வாயு வய­லில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­கு­ அ­னுப்­பப்­படும் எரி­வா­யு­வின் அளவு கொஞ்­சம் குறை­வாக இருக்­கும் என்று பேட்­டி­யில் அவர் கூறினார்.

தேவைக்கு அதி­க­மாக உற்­பத்தி இருந்­தால் கூடு­த­லாக வாயு அனுப்­பப்­படும் என்­றார் அவர்.

இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட உடன்­பாடு ஐந்து ஆண்­டு­க­ளாக சுருக்­கப்­பட்­டது ஏன் என்று கேட்­ட­போது, நீண்­ட­கால விநி­யோ­கத்­திற்கு உத்­த­ர­வா­தம் தர இய­லாது என்று அவர் கூறி­னார்.

எரி­வாயு வளம் குறை­வ­தும் உள்­நாட்­டில் தேவை அதி­க­ரிப்­ப­தும் இதற்­கான கார­ணம் என்­றார் அவர்.

இத­னி­டையே, தென் சுமத்ரா எரி­வாயு விநி­யோ­கம் பற்றி கருத்து கூறிய பகுப்­பாய்­வா­ளர்­கள், அந்­தத் தீவில் இருந்து வரக்­கூ­டிய எரி­வாயு­வின் அளவு குறை­வாக இருக்­கும் என்று தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னர்.

சிங்­கப்­பூர் திரவ இயற்கை எரி­வாயு இறக்கும­தி­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.