எஸ்எம்யு பல்கலைக்கழக உச்ச மின்சக்தி சிக்கனக் கட்டடம்

எஸ்எம்யு பல்கலைக்கழக உச்ச மின்சக்தி சிக்கனக் கட்டடம்

2 mins read
5b6e4bef-64d3-4215-8ce6-5360b2a00bff
எஸ்எம்யு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கனெக்‌ஷன் என்ற கட்டடத்தின் கூரையில் பொருத்தப்பட்டு இருக்கும் சூரியசக்தித் தகடுகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­கழகம் (எஸ்எம்யு) நேற்று தனது ஏழு மாடி எரி­சக்தி சிக்­கன கட்­ட­டத்தைத் திறந்­தது. அந்­தப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சமூக அறி­வியல் பள்­ளி­யும் ஒருங்­கி­ணைந்த கல்விக் கல்­லூரியும் அந்­தக் கட்­ட­டத்­தில் அமைந்து இருக்­கும்.

புதிய கட்­ட­டத்­தின் கூரையில் சூரி­ய­சக்தித் தக­டு­கள், எரி­சக்­தி­யைச் சிக்­க­னப்­ப­டுத்­தும் குளிர்­சா­தன முறை போன்ற அம்­சங்­கள் இருக்­கின்­றன.

வெப்­பத்தைக் குறைக்­கும் விதத்­தில் அந்­தக் கட்­ட­டம் வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கிறது. அதே நேரத்­தில் கட்­ட­டம் முழு­வ­தும் அதிக வெளிச்­ச­மும் இருக்­கும்.

ஆகை­யால், அந்­தக் கட்­ட­டத்­தில் ஒளி­யேற்­ற­வும் குளுமை வசதியை ஏற்­ப­டுத்­த­வும் குறை­வான எரி­சக்­தியே தேவைப்­படும்.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் பசுமை அடை­யாள எரி­சக்தி குறைவு கட்­டட பிளாட்­டின விருது 2020ல் அந்தக் கட்­ட­ட திட்ட வடி வமைக்குக் கிடைத்­தது.

அதா­வது, அந்­தக் கட்­ட­டம் குறைந்­த­பட்­சம் 60 விழுக்­காட்டு எரி­சக்­தியை மிச்­சப்­ப­டுத்­தும்.

எஸ்எம்யு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வளா­கம் பிராஸ் பாசா, பூகி­ஸில் பரந்து விரிந்து அமைந்துள்ளது.

சிங்­கப்­பூ­ரின் நகர மையத்­தில் ஆகப் பெரிய சூரி­ய­சக்தி ஆலை இங்­கு­தான் இருக்­கிறது. அந்த ஆலை, இந்­தப் பல்­க­லைக்­கழக வளா­கத்­தின் ஒட்­டு­மொத்த மின்­சா­ரத் தேவை­யில் ஏறக்­கு­றைய 12%ஐ ஈடு­செய்­கிறது.

பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் நேற்று நடந்த புதிய கட்­டட தொடக்க நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கலந்து­கொண்­டார்.

பரு­வ­நிலை மாற்­றம் போன்ற முக்­கி­ய­மான சவால்­கள் சிக்­க­லானவை. பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, பல்­வேறு பின்­ன­ணி­க­ளைச் சேர்ந்த மக்­கள் அவற்­றுக்கான புத்­தாக்­கத் தீர்­வு­க­ளைக் காண வேண்டி இருக்­கும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

புதிய ஒருங்­கி­ணைந்த கல்விக் கல்­லூரி, பல துறை­களை உள்­ளடக்­கக்கூ­டிய கல்­வியைப் புதிய உச்சத்­திற்குக் கொண்டு செல்­லும் என்றார் துணைப் பிர­த­மர்.