கவிமாலையின் 269ஆவது மாதச் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, அறையில் நடக்கிறது.
இம்மாதக் கவிமாலையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக பாரம்பரிய உடை அணிந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் படைக்கும் கவிதை நிகழ்ச்சி இடம்பெறும்.
கவிமாலை கவிஞர்கள் மு சே பிரகாஷ், வெற்றிசெல்வன், மாரிமுத்து சரவணகுமார், இராம.நாச்சியப்பன், லலிதாசுந்தர், பிரபாதேவி, வெண்ணிலா, ரத்தினாம்பிகை, சங்கீதா ஆகியோர் பங்கேற்கும் தீபாவளி மேடை கவிதை போட்டியும் அரங்கேறும் என்று கவிமாலை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை கவிமாலை நடத்தி வருகிறது.

