புதுவகை போதைப்பொருள்: சமாளிக்க கடுமையான சட்டம் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவிப்பு

புதுவகை போதைப்பொருள்: சமாளிக்க கடுமையான சட்டம் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவிப்பு

2 mins read
4e871f4f-bdda-4bc6-993d-9a3c8023ffd3
-

புதிய வகை போதைப்­பொ­ருள்­களால் (என்­பி­எஸ்) ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்க ஏது­வாக வரும் மாதங்­களில் சட்­டங்­கள் கடு­மை­யாக்­கப்­படும்.

போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் கைக்கொண்டு வரும் கடு­மை­யான நிலைப்பாட்டை பிர­தி­பலிக்­கும் வகை­யில் சட்­டத் திருத்­தங்­கள் இருக்­கும். தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இதனைத் தெரி­வித்­தார்.

ஒரு பொருள், போதைப்­பொ­ருள் ஒழிப்புச் சட்­டத்­தின்­கீழ் வகைப்­படுத்­தப்­ப­ட­வில்லை என்­றா­லும்­கூட அந்தப் பொரு­ளி­னால் ஏற்­ப­டக்­கூடிய போதை விளை­வு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு நட­வடிக்­கை­களை எடுக்க மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வுக்கு அதி­கா­ரம் இருக்க வேண்­டும் என்று உள்­துறை அமைச்சு பரிந்­து­ரைக்­கும் என அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உள்­து­றைக் குழு­வின் என்எஸ் காத்­திப்­பில் நேற்று நடந்த உள்­துறை அமைச்­சின் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அமைச்­சர் உரை­யாற்­றி­னார். புதிய வகை போதைப்­பொ­ருள்­களை மிக­வும் செம்­மை­யான முறை­யில் கையாள ஏது­வாக அடுத்த சில மாதங்­களில் சட்­டங்­கள் கடு­மை­யாக்­கப்­படுவது ஏன் என்பதையும் அவர் விளக்கினார்.

"புதிய வகை போதைப்­பொ­ருள்­களை ஆய்­வுக்­கூ­டத்­தி­லேயே எளி தாக தயா­ரித்­து­வி­ட­லாம். அத்தகைய ஆய்­வுக்கூடங்­களை அமைப்­ப­தும் அவ்­வ­ளவு சிர­ம­மான ஒன்­றல்ல.

"சந்­தைக்கு வரக்­கூ­டிய புதுப்­புது போதைப்பொருள்­களை எல்­லாம் கண்­கா­ணித்து கவ­னித்து வரு­வது என்­பது பெரிய சவா­லாக இருக்­கிறது," என்று திரு­வாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

புதிய வகை­யி­லான 13 போதைப்­பொ­ருள்­கள் கடந்த ஜூன் மாதம் போதைப்­பொ­ருள் ஒழிப்புச் சட்டத்தின்­கீழ் சேர்க்­கப்­பட்­டன. அவை ஏ பிரிவு போதைப்­பொரு ளாகப் பட்­டி­ய­லி­டப்­பட்­டன.

இப்­படி செய்­த­தன் மூலம் அத்­த­கைய பொருள்­களைக் கடத்­து­வது, தயா­ரிப்­பது, இறக்­கு­மதி, ஏற்­று­மதி செய்­வது, வைத்­தி­ருப்­பது, புழங்­குவது எல்­லாம் குற்­றச்­செ­ய­லாக ஆக்­கப்­பட்டு உள்­ளன.

மஷ்­ரூம், ஸ்பைஸ் போன்ற புதிய வகை போதைப்­பொ­ருள்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தால் மனமயக்கம், மர­ணம் போன்ற பாதிப்­பு­கள் உட­ல­ள­வி­லும் மன­த்த­ள­வி­லும் ஏற்­படு­வ­தாக மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறு­கிறது.

போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் நிலை பற்றி விளக்­கிய திரு­வாட்டி டியோ, தொடர்ந்து கடு­மை­யான அணு­கு­மு­றை­களை சிங்­கப்­பூர் கைக்­கொண்டு வரும் என்று குறிப்­பிட்­டார்.

இதில் மரண தண்­டனை விதிப்­ப­தும் உள்­ள­டங்­கும் என்­றார் அவர்.

போதைப்­பொ­ருள் குற்­றங்­களுக்கு மரண தண்­டனை விதிப்­பது விரும்­பிய பல­னைத் தராத ஒன்று என்று கூறப்படும் கருத்­து­கள் கப­டத்­த­னம் வாய்ந்­தவை, பகுத்­த­றி­வுக்கு ஒவ்­வா­தவை என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

மரண தண்­டனை நடப்­பில் இருப்­ப­தன் கார­ண­மாக சிங்­கப்­பூருக்­குள் கடத்­தப்­படும் போதைப்­பொ­ருள்­க­ளின் அளவு கணி­ச­மான அள­வுக்குக் குறைந்­தி­ருக்­கிறது என்­றும் அமைச்சர் தெரி­வித்­தார்.