பழைய பிடோக் சவுத் உயர்நிலைப்பள்ளி வளாகம் இடிக்கப்படும்; வீடுகள் உருவாகும்

2 mins read
d7362ac7-b1bc-4fe1-9378-355892a34eed
-

எண் 860 நியூ அப்­பர் சாங்கி ரோட்டில் உள்ள முன்­னாள் பிடோக் சவுத் உயர்­நி­லைப்­பள்ளி வளா­கம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இடிக்­கப்­படும். அந்த இடத்­தில் வீடு­கள் கட்­டப்­படும்.

இடிப்­புப் பணி­கள் சுமார் ஐந்து மாதம் நடக்­கும் என்று மதிப்­பி­டப்­படு­வ­தாக கல்வி அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார் என்று சண்டே டைம்ஸ் தெரி­வித்­தது.

இடிப்­புப் பணி­கள் முடி­வ­டைந்­த­தும் அந்த இடம் சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும். பிறகு அந்த இடத்தை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் எடுத்­துக்­கொள்­ளும். ஏறத்­தாழ இரண்டு காற்பந்து திடல்­கள் அள­வுக்கு 1.6 ஹெக்­டர் பரப்­ப­ள­வு­டன் கூடிய அந்த இடம், குடி­யி­ருப்புப் பய­னீட்­டிற்­காக வகைப்­படுத்­தப்­பட்டு இருக்­கிறது.

அந்த இடத்­திற்­கான திட்­டங்­கள் பூர்த்­தி­யா­ன­தும் திட்ட விவரங்­கள் பற்றி அறி­விக்­கப்­படும் என்று வீவக கூறி­ய­தா­க­வும் சண்டே டைம்ஸ் தெரி­வித்­தது.

முன்­னாள் பிடோக் சவுத் உயர்­நி­லைப்­பள்ளி 1980ல் திறக்­கப்­பட்­டது. 2002 டிசம்­பர் வரை 20 ஆண்டு­க­ளுக்­கும் அதிக காலம் அந்­தப் பள்ளி சேவை வழங்­கி­யது.

அது இப்­போது ஜாலான் லாகார் பிடோக்­கில் 3 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள இடத்­தில் அமைந்து செயல்­படு­கிறது. இந்த இட­மும் பழைய இட­மும் ஏறத்­தாழ 1.6 கி.மீ. தொலை­வில் இருக்­கின்­றன.

இத­னி­டையே, இடிக்­கப்­படும் பள்­ளிக்­கூட வளா­கம் உள்ள இடத்­தில், அள­வை­யும் கட்­டு­மான இட விகி­தாச்­சா­ரத்­தை­யும் பொறுத்து 500 முதல் 600 வீடு­களை கட்­ட­லாம் என்று சொத்­துத் துறை பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இவ்­வே­ளை­யில், மீண்­டும் கட்டி உரு­வாக்­கப்­படும் ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூரி 2028ல் திறக்­கப்­ப­டும்­போது அது 4.3 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள இடத்­தில் அமைந்து இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அத­னு­டைய இப்­போ­தைய இடப்­ப­ரப்பு 6 ஹெக்­டர்.

நிலப் பரப்­ப­ள­வைக் குறைக்­கும் வகை­யில் கல்வி அமைச்சு அர­சாங்க கல்வி நிலை­யங்­களை உய­ர­மான கட்­ட­டங்­களில் அமைக்க முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

அந்­தக் கல்­லூரி, 2024 ஜன­வரி­யில் அப்­பர் சிராங்­கூன் ரோட்­டில் தற்­கா­லிக இடத்­திற்கு மாறும். அதி­லி­ருந்து நான்­காண்­டு­களில் புதிய கல்­லூரிக் கட்­ட­டங்­கள் கட்டி முடிக்­கப்­படும்.