வேளாண் உணவு தொடர்பான மூவகை தரங்கள் அதிகாரபூர்வமாக நடப்புக்கு வந்துள்ளன.
அவை விவசாயிகளுக்கு அவர்களின் நடைமுறை தொடர்பிலான பசுமை வழிகாட்டி நெறிமுறைகளை நிர்ணயிக்கும்.
அதோடு, உள்ளூரில் விளையும் காய்கறிகள், கடலுணவு, முட்டைகள் வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு வலுவான உத்தரவாதத்தையும் அது வழங்கும்.
அந்தத் தரங்களை சிங்கப்பூர் உற்பத்தித்துறைக் கூட்டமைப்பும் தர உருவாக்க நிறுவனம் என்ற அமைப்பும் உருவாக்கி உள்ளன.
புதிய தரங்கள், ஏற்கெனவே நடப்பில் இருந்துவந்த சிங்கப்பூர் உணவு முகவையின் 'சிங்கப்பூர் நல்ல வேளாண்மை நடைமுறை' திட்டங்களுக்குப் பதிலாக இடம்பெறுகின்றன.
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் முட்டைகளில் 30 விழுக்காடு உள்ளூரிலேயே உருவாக்கப்படுகின்றன.
அதேவேளையில் காய்கறிகளைப் பொறுத்தவரை 4%தான் இங்கேயே விளைவிக்கப்படுகின்றன. கடலுணவைப் பொறுத்தவரை இந்த அளவு 8%ஆக இருப்பதாகத் தெரிகிறது.

