உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண $98 கட்டணம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண $98 கட்டணம்

1 mins read
b14a5b7e-422d-4ccf-af49-18a5a609eebc
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்டெல், ஸ்டார்ஹப், மீடியாகார்ப் ஆகிய நிறுவனங்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் என அறிவித்துள்ளன. போட்டிகளை ஒளிபரப்ப இம்மூன்று நிறுவனங்களும் முத்தரப்பு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளன. உலகக் கிண்ணப் போட்டியின் அனைத்து 64 விளையாட்டுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

போட்டியின் முதல் ஆட்டத்திற்கு இன்னும் 21 நாட்கள் உள்ள நிலையில், இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டம் நவம்பர் 20ஆம் தேதி இடம்பெறும். சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அனைத்து உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண $98 கட்டணம் செலுத்தவேண்டும். இந்தச் சலுகை நவம்பர் 6ஆம் தேதி முடிவடையும். நவம்பர் 6ஆம் தேதிக்கு பின்னர், கட்டணம் $118ஆக இருக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், உலக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண்பதற்கு $112 கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் $4 அதிகரித்துள்ளது.

மீடியாகார்ப் நிறுவனம் ஒன்பது போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பும். தொடக்க ஆட்டம், ஐந்து குழுப்பிரிவு ஆட்டங்கள், அரையிறுதிச் சுற்று, இறுதிச்சுற்று ஆகிய ஆட்டங்களை இலவசமாகக் காணலாம்.

மேல் தகவல்களுக்கு இந்த இணையப்பக்கங்களை நாடலாம்:

  1. www.starhub.com/fifaworldcup
  2. www.singtel.com/worldcup
  3. www.mewatch.sg/fifaworldcup