உயிர்வாழப் போராடினோம்: தென்கொரிய கூட்ட நெரிசலில் தப்பித்த சிங்கப்பூரர்

உயிர்வாழப் போராடினோம்: தென்கொரிய கூட்ட நெரிசலில் தப்பித்த சிங்கப்பூரர்

2 mins read
95eb3757-ad0c-45f4-84a5-9cf5c8644a0f
கூட்ட நெரிசலில் சிக்கி வெளியேறத் தவிக்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

தென்கொரிய கூட்ட நெரி­ச­லில் சிக்கி நூலி­ழை­யில் உயிர் பிழைத்­துள்­ளார் சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர்.

சனிக்­கி­ழ­மை­தான் 25 வயது கோ மிங் கென் தமது இரு சிங்­கப்­பூர் நண்­பர்­க­ளு­டன் தென் கொரிய தலை­ந­கர் சோலுக்­குச் சென்று சேர்ந்­தார்.

ஹாலோ­வீன் பேய்த் திரு­வி­ழா­வில் மூவ­ரும் கலந்­து­கொண்டு களிப்­பில் ஆழ்ந்­தி­ருந்த வேளை­யில் கூட்ட நெரி­ச­லில் சிக்­கிக்­கொண்­டார் கோ.

தமது இரு நண்­பர்­க­ளை­விட்­டுப் பிரிந்த அவர் தமது உயி­ருக்­கா­கப் போரா­ட­வேண்­டி­யி­ருந்­தது.

சில வேளை­களில் மக்­கள் அலை­போல தள்­ளப்­பட்­ட­னர் என்­றும் பலர் தள்­ளு­முள்­ளுக்கு ஆளாகி கீழே விழுந்தனர் என்­றும் கோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கூறி­னார்.

"நானும் என் நண்­பர்­களும் அந்­தக் கூட்­டத்­தில் உயிர்வாழ எங்­க­ளால் முடிந்­த­வரை போரா­டிக்­கொண்­டி­ருந்­தோம்," என்­றார் காணொளிகள் எடுக்கும் கலைஞராகப் பணிபுரியும் கோ.

அந்­தக் கூட்­டத்­தி­லி­ருந்து தப்­பிக்க வழி தேடி­ய­போது ஒரு கட்­டத்­தில் அவர் சுவர் ஒன்­றின் மீது தள்­ளப்­பட்­ட­தால் அவ­ரது நண்­பர்­

க­ளி­ட­மி­ருந்து பிரிந்­தார்.

மக்­க­ளுக்கு நடுவே சிக்­கிக் கொண்­ட­தால் மூச்சுவிடவே சிர­மப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

அப்­போது தரை­யி­லி­ருந்து சற்று உய­ரத்­தில் இருந்த விளிம்­பில் எப்­ப­டியோ ஏறி­விட்­டார் கோ. அங்­கி­ருந்து மதுக்­கூ­டம் ஒன்­றுக்­குள் நுழை­ய­லாம் என்று முயன்றபோது அதன் பாது­கா­வ­லர் அவ­ரைத் தடுத்து நிறுத்­தி­னார்.

"விளிம்­பி­லேயே நின்­று­கொண்­டி­ருந்­த­போது பலர் கீழி­லி­ருந்து தம்மை மேலே தூக்­கும்­படி என்னை எட்­டிப் பிடித்­த­னர். நானும் அவர்­களை மேலே இழுக்க முயற்சி செய்­தேன் ஆனால் முடி­ய­வில்லை, அது ஆபத்­து­மிக்­க­தா­க­வும் இருந்­தது" என்­றார் கோ.

ஒரு கம்­பி­யைப் பற்­றிக்­கொண்டு சுவற்றின் விளிம்­பின் ஓர­மா­கவே மெல்ல மெல்ல நடந்து சென்­றார் கோ. மிக­வும் உய­ர­மாக இருந்­த­தால் கீழே கு­திக்­க­வும் முடி­ய­வில்லை.

பிறகு ஒருவழி­யா­க சற்று இட வசதியுடன் கூடிய பகுதி வந்தது. அங்கே இருந்த கடை­வீடுகளின் கூரை­யில் சறுக்கி கீழே குப்­பைப் பைக­ளின் மீது குதித்துத்

தப்­பினார் கோ.

"அங்­கி­ருந்து நான்தான் கடை­சி­யா­கத் தப்­பித்­தேன். என் இரு நண்­பர்­க­ளுக்­கும் அடி­ப­ட­வில்லை, எனக்­குத்­தான் சில வெட்­டுக்­

கா­யங்­கள் ஏற்­பட்­டன. ஆனால் கூட்­டத்­தில் மாட்டி மயங்­கி­யவர்­க­ளை­யும் இடிபட்­ட­வர்­க­ளை­யும் ஒப்­பிட்­டால் என் நிலைமை எவ்­வ­ளவோ பர­வா­யில்லை.

"அங்­கேயே தொடர்ந்து இருந்­தி­ருந்­தால் என்ன ஆயி­ருக்­கும் என்று என்­னால் யோசிக்­கக்கூட முடி­ய­வில்லை. நாங்­கள் இறந்­து­இருக்­க­லாம்," என்று விவ­ரித்­தார் கோ. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை குறைந்தது 153 பேர் உயிரிழந்துவிட்டனர்.