உலகக் கிண்ண காற்பந்து நேரடி ஒளிபரப்பு: $98 கட்டணம்

உலகக் கிண்ண காற்பந்து நேரடி ஒளிபரப்பு: $98 கட்டணம்

2 mins read
7306f10f-7491-4179-8b90-7b4fa29be329
-

உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 64 ஆட்­டங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்ப சிங்­டெல், ஸ்டார்­ஹப், மீடி­யா­கார்ப் நிறு­வ­னங்­கள் ஆகியவை மூவழி ஒப்­பந்­தம் ஒன்றை அறி­வித்­துள்­ளன. அதன்­படி நவம்­பர் 6க்கு முன்­பாக நேரடி ஒளி­ப­ரப்­புச் சேவைக்­குப் பதிவு செய்­வோர் $98 சிறப்பு விலை­யில் அச்­சே­வை­யைப் பெற­லாம்.

உலகக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி வரும் நவம்­பர் மாதம் 20ஆம் தேதி முதல் டிசம்­பர் 21 வரை கத்­தா­ரில் நடைபெறும்.

சிங்­டெல், ஸ்டார்­ஹப் வாடிக்­கை­யா­ளர்­கள் உல­கக் கிண்ண சேவையை $98க்குப் பெற­லாம். நவம்­பர் 6க்­குப் பிறகு கட்­ட­ணம் $118ஆக உய­ரும்.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் நேரடி ஒளி­ப­ரப்­புக்­கான கட்­ட­ணம் $94 ஆக இருந்­தது (சலுகை காலத்­திற்­குப் பிறகு $112). உல­கக் கிண்­ணத்­து­டன் இரண்டு ஆண்­டு­கள் சிறப்பு ஒப்­பந்த சேவை­யை­யும் சிங்­டெல், ஸ்டார்­ஹப் நிறு­வ­னங்­கள் வழங்­கு­கின்­றன.

மீடி­யா­கார்ப் நிறு­வ­னம் நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு போலவே ஒன்­பது ஆட்­டங்­களை நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பும்.

உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் தொடக்க ஆட்­டம், ஐந்து குழுப் பிரிவு ஆட்­டங்­கள், இரு அரை இறுதி ஆட்­டங்­கள் ஆகி­ய­வற்­று­டன் இறுதி ஆட்­ட­மும் இல­வ­ச­மாக ஒளி­ப­ரப்­பப்­படும்.

மீடி­யா­கார்ப் நிறு­வ­னத்­தின் மீவாட்ச் செய­லி­யில் அனைத்து ஆட்­டங்­க­ளை­யும் காண ரசி­கர்­கள் அதே $98 கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டும்.

இந்த ஆண்டு உல­கக் கிண்ண ஒளி­ப­ரப்­புக்­கான கட்­ட­ணங்­களை அறி­விப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து ரசி­கர்­கள் அதி­ருப்­தியை தெரி­வித்து வந்­துள்­ள­னர்.

உலகக் கிண்ண நேரடி ஒளிபரப்புக் கட்டணங்கள் பற்றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு www.starhub.com/fifaworldcup, www.singtel.com/worldcup அல்­லது www.mewatch.sg/fifaworldcup இணை­யத்­த­ளங்­களை நாட­லாம்.